நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் பிரதமருக்கோ, தேர்ந்து எடுக்கும் உங்களுக்கோ இந்த நாட்டின் மானத்திற்கோ எந்த சம்மந்தமும் இல்லை என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? "Who represents India?" என்று ஒரு உண்மைக் குடிமகனிடம் கேளுங்கள் "Men in Blue" என்று அழகாக சொல்லுவார்கள். அப்ப ஜனாதிபதியெல்லாம் சுத்த வேஸ்ட்டா என்ற அபத்தமான கேள்வியை கேட்டால் "யாரோ ஒரு அம்மாதான் ஜனாதிபதி ஆனா அந்தம்மா பேருதான் நியாபகத்தில் இல்லை" என்று பதில் கிடைக்கும்!

ஒரு ஒரு ஒலிம்பிக் போட்டிகளிளும் ஒரு வெங்கலம் அல்லது ஒரு வெள்ளி வாங்குவது இந்தியாவுக்கு பெருமையாம், இந்த நீலச்சட்டை நாயகர்கள் ஒரு நாள் உலகக் கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் அவமானமாம்?? உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் வெறும் 10 நாடுகள் பங்கு பெரும் கிரிக்கெட் போட்டி எப்படி உலகக் கோப்பையானது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. அனைத்து நாடுகளும் பங்கு பெரும் ஒலிம்பிக் ஒரு பொருட்டே அல்ல!!

முதலில் இந்த நீலச்சட்டை நாயகர்களின் யோக்யத்தை பார்கலாம். இந்த நீலச்சட்டை விரர்கள் BCCI என்ற பணம் காய்க்கும் நிறுவனத்தின் செல்லப்பிள்ளைகளே அன்றி இந்தியாவின் நேரடி செல்லப்பிள்ளைகள் அல்ல (உண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தாங்கிப்பிடிக்க ஒலிம்பிக் வீரர்கள் தான் வேண்டுமேயன்றி இந்த நீலச்சட்டைகரர்கள் அல்ல). போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயிற்சியில் ஈடுபடுவது போல் பத்திகைக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு தண்ணியைப்போட்டு மட்டையாகிக் கிடந்த மேட்டர் இவர்கள் தோத்தால் மட்டும் பத்திரிகையில் இடம்பெரும். இவர்களில் எத்தனை பேர் வருமான கணக்கு சரியாக காண்பித்து வரி செழுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? உண்மையைக்கூற வேண்டும் என்றால் சரியாக வரி செழுத்தாமல், சரியாக விளையாடாமல் கிடைத்த பெயரை பணமாக்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் அல்லவா தேச துரோகிகள்?

இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள் திருந்த வேண்டியது நாம்தான், கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!

6 மறுமொழிகள்:

Unknown said...

கருப்பன்,

நல்லா சொன்னீங்க. அப்ப, நானும் தேசத் துரோகிதான் :)\

//கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!//

இது எப்போ இந்த பைத்தியங்களுக்குப் புரியப் போவுதோ? எவனோ சம்பாதிப்பதற்கு, இந்தப் பைத்தியங்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் சிரிப்பாவும் வருத்தமாவும் இருக்கு ...

அரை பிளேடு said...

//"யாரோ ஒரு அம்மாதான் ஜனாதிபதி ஆனா அந்தம்மா பேருதான் நியாபகத்தில் இல்லை"
//

ஆமா. அந்தம்மா பேரு என்னவோ ஆச்சே. இருங்க யோசிச்சு சொல்லுறேன்..

:)

கருப்பன் (A) Sundar said...

//
இது எப்போ இந்த பைத்தியங்களுக்குப் புரியப் போவுதோ? எவனோ சம்பாதிப்பதற்கு, இந்தப் பைத்தியங்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் சிரிப்பாவும் வருத்தமாவும் இருக்கு
//

உண்மைதான் தஞ்சாவூரான், சம்பாதிப்பது இவர்கள் மட்டுமல்ல பெட்டிங் பிஸ்னஸ் செய்பவர்கள், அக்கா மாலா, கப்சி இன்னும் ஏனய பண முதலைகள் :-(

//
ஆமா. அந்தம்மா பேரு என்னவோ ஆச்சே. இருங்க யோசிச்சு சொல்லுறேன்..
//
அட ரெம்ப கஷ்டப்படவேண்டாம் அரை பிளேடு யோசிச்சு என்ன பயண், தேச பிதானு பட்டமா கிடைக்கப்போகுது. வேண்டுமானால் நேற்றய கிரிக்கெட் மேட்சில் 2 சிக்ஸர்கள் அடித்தது யார் என்று யோசித்துச் சொல்லுங்கள் குறைந்த பட்சம் "தேச துரோகி" பட்டமாவது நீங்கும்!!

தஞ்சாவூரான், அரை பிளேடு எட்டிப்பார்த்தமைக்கு நன்றி.

ஜமாலன் said...

//இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள் திருந்த வேண்டியது நாம்தான், கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!//

அருமையான பஞ்ச். பாகிஸ்தானும் இநத்தியாவும் பந்தை எறிவதி்ல்லை “பாமை“-த்தான் எறிந்து விளையாடுகிறார்கள். இது ஒரு தேசியவியாதி. மருந்து... மட்டைய நாம் கையில எடுப்பதுதான்.

Unknown said...

//கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு//
ஐய. சினிமாலேர்ந்து தான் நாங்க முந்தாநேத்து, நேத்து, இன்னிய சீப் மினிஸ்ட்டர கண்டு பிடிச்சோம். அப்ப அடுத்த சீப் மினிஸ்ட்டர அங்க கிரிக்கெட்ல போய் புடிச்சிரலாம். இன்னான்றீங்க.

கருப்பன் (A) Sundar said...

//
பாகிஸ்தானும் இநத்தியாவும் பந்தை எறிவதி்ல்லை “பாமை“-த்தான் எறிந்து விளையாடுகிறார்கள்.
//
இதுதான் அருமையான பஞ்ச! இந்தியா பாக்கிஸ்த்தான் மேட்ச் நடக்கும் போது நம்ம மக்கள் பண்ணுற அமளி துமளி இருக்கே... அய்யோ கொடுமை...

இதுல இன்னொரு கொடுமை சரியா பொதுத்தேர்வு நடக்கும் போது தான் இநத உலக்கோப்பை வரும். நம்மாளுக சும்மாவே படிப்புல ரெம்ப கெட்டி!!

//
ஐய. சினிமாலேர்ந்து தான் நாங்க முந்தாநேத்து, நேத்து, இன்னிய சீப் மினிஸ்ட்டர கண்டு பிடிச்சோம். அப்ப அடுத்த சீப் மினிஸ்ட்டர அங்க கிரிக்கெட்ல போய் புடிச்சிரலாம். இன்னான்றீங்க.
//
சொல்ல முடியாது சுல்த்தான் அவர்களே, சினிமா மாநில லெவல்ல தான் ஃபேமஸ் ஆனால் கிரிக்கெட் நாடுமுழுக்க பிரபலம் அதுனால செல்ல முடியாது நாளைக்கே டென்டுல்கர் ஜனாதிபதியானாலும் ஆகலாம்.

ஜமாலன், சுல்தான் தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.