இன்று அலுவலகத்துக்குள் நுழைந்த உடன் கண்ணில் பட்ட விஷயம், என் தோழியின் புடவை கெட்டப். சரி காலையில் சீக்கிரம் எழுந்திருச்சிருப்பாள் என்று எண்ணிக்கொண்டு வேலையில் மூழ்கிப்போனேன். மதியம் உணவு வேளையில் தான் கவனித்தேன் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் சேலையில் தான் வந்திருந்தனர். மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்த போது அவளே வந்து கேட்டுவிட்டாள் "ஒரு Women's day வாழ்த்து சொன்னா குறைந்தா போய்விடுவாய் " என்று! நாளைக்கு தான மகளிர் தினம் என்று கேட்டேன். நாளை விடுமுறை என்பதால் இன்றே கொண்டாடுகிறார்களாம். ஏகப்பட்ட இனிப்பு, பரிசுப்பொருட்கள் என ஆபீசையே அமர்களபடுத்திவிட்டனர். ஆண்கள் யாரையும் வேடிக்கைகூட பார்க்க அனுமதிக்கவில்லை! போகிற போக்கைப்பார்த்தால் கூடிய விரைவில் ஆண்கள் 10% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன்!!





வலையுலக தோழிகளே, சண்டை போடாமல் ஆளுக்கு ஒரு ரோஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். தங்கள் அனைவருக்கும் எங்கள்(வருத்தப்படாத சிறுவர்கள், வாலிபர்கள் & கிழவர்கள் சங்கம்) சார்பாக

மகளிர் தின வாழ்த்துக்கள்!!

2 மறுமொழிகள்:

ரசிகன் said...

//போகிற போக்கைப்பார்த்தால் கூடிய விரைவில் ஆண்கள் 10% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன்!!//

ஹா..ஹா... சரிதான்ன்னு தோனுது:)))))))
ரோஜாக்கள் அருமை..:)

கருப்பன் (A) Sundar said...

வருகைக்கு நன்றி ரசிகன்.