தமிழில் பொதுவாக பெண்களை குறிப்பிடும் போது மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட நேர்மாறாக குறிப்பிடுகின்றனர் ஆண்களை "Cool Guys" என்றும் பெண்களை "Hot Girls" என்றும் கூறுகின்றனர். தமிழில் நெருப்பு என்று ஆண்களையும் பஞ்சு என பெண்களையும் குறிப்பிடுகின்றனர்.
இது மட்டுமல்ல நாமெல்லாம் கங்கா, யமுனா, காவேரி என ஆறுகளுக்கு பெயர் வைக்கிறோம் ஆனால் ஆங்கிலத்திலோ கத்ரீனா, ரீட்டா என புயலுக்கும், சூராவளிக்கும் பெயர் வைக்கின்றனர். இந்த முரண்பாடு ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சற்று விளக்குங்களேன்.
Feb 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
பெயர் விளக்கம்
தத்துவம்
பகல்ல பசுமாடு தெரியாதவனுக்கு, இருட்டுல எருமை மாடா தெரியப்போகுது!
19 மறுமொழிகள்:
நம்ம ஊரில் பெண்கள் அமைதியாக /அடக்கமாக இருந்தால் தான் போற்றுவார்கள். இல்லாவிடில் அடங்காபிடாரி என்று தூற்றூவார்கள்.
:(
வெள்ளைக்காரர்களுக்கு, ஆண்கள் அடக்கமாக இருந்தால் தான் பிடிக்கும் போல் தெரிகிறது.
//ஆனால் ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட நேர்மாறாக குறிப்பிடுகின்றனர் ஆண்களை "Cool Guys" என்றும் பெண்களை "Hot Girls" என்றும் கூறுகின்றனர்.
//
இந்த மாதிரி அலாதியா சிந்திச்சுக் கேள்வி கேட்டா, நான் அம்பேல் :)
//
வெள்ளைக்காரர்களுக்கு, ஆண்கள் அடக்கமாக இருந்தால் தான் பிடிக்கும் போல் தெரிகிறது.
//
உண்மை தான் கோவியாரே, மிலான் ஏர்போர்ட்டில், இமிக்ரேஷன் ஆபீசரை ஒரு அமேரிக்க பெண் கிழி கிழி என்று கிழித்தார். அவரது பாய் ஃபிரண்ட் தேமே என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்...
கண்ணன், பாலா வருகைக்கு நன்றி.
இயற்கையிலேயெ பெண்களின் கூந்தலுக்கு மணம் உள்ளதா? இல்லையா? --- என்ற பழங்காலக் கேள்விக்கும் உங்களுடைய இந்த 2008 கேள்விக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
பெண்களை நாம்தான் (இந்தியர்கள்) தாய் என்றும், பூமாதா, என்றும் ஆறுகளைக்கூட பெண் என்றும் வழிபடுகிறோம்.
இருந்தும் 'குஷ்பூ' வை மனைவியாக அடைந்த சுந்தர். சி. க்களும் இந்தியாவில் இருக்கத்தானே செய்கிறார்கள்
அப்படின்னு நீயே நெனசுகிட்டா .... இங்க வந்து பாரு.. எம்புட்டு பொண்ணுங்க என்னைய 'ஹாட் லிஸ்ட்' ல வசிருக்கங்கனு... நைட்டு நாலு ( அதாம்ப்பா காலைல ) மணிக்கு மேல நான் எந்த க்ளப் க்கு போனாலும் நான் பொண்ணுங்களுக்கு ஹாட் டா தான் தெரிவேனாக்கும்...எனக்கு தான் யாரையுமே பிடிக்கல ... ஹீ ஹீ.....
பிரிட்டிஷ் காரன் குவின் விக்டோரியா, எலிசபத் னு எல்லாம் பொண்ணுங்க பேர்தான் கப்பலுக்கு வைக்கிறான்.. பால போன இந்திய காரன் 'விக்ராந்த்' னு ஆம்பள பேர எல்லாம் வைக்குறான் ...
புயல்களுக்கு, சூறாவளிகளுக்குப் பெண்களின் பெயர் மட்டுமல்ல, ஆண்களின் பெயரும் உண்டு. என் விளக்கம் இங்கே :-)
//புயல்களுக்கு, சூறாவளிகளுக்குப் பெண்களின் பெயர் மட்டுமல்ல, ஆண்களின் பெயரும் உண்டு. என் விளக்கம் இங்கே :-)/
repeatu. oru varusham pengalin peyarum, maru varusham aangalin peyarum vaipathu valakkam.
சேதுக்கரசி, தாங்கள் கொடுத்த சுட்டி கூகிள் குரூப்ஸ்சில் உள்ள கட்டுரையை காட்டுவதால் என்னால் அங்கு பின்னூட்டமிட முடியவில்லை.
தாங்கள் புயலடிக்கும் இடத்தில் இருந்திருக்கிறீர்களா?? ரெம்ப அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா?? நான் கூட இது மாதிரி இயற்கை சீற்றத்தின் போது அருகில் இருக்க ஆசைப்படுவேன்.
//
இந்தப் பட்டியல்கள் 1953-ல் தேசீய சூறாவளி மையத்தில்
தயாரிக்கப்பட்டன. முதலில் பெண்பால் பெயர்கள் மட்டுமே கொண்ட
இப்பட்டியல்கள் 1979-ல் ஆண்பால் பெயரும் பெண்பால் பெயரும் மாற்றி மாற்றி
வருமாறு அமைக்கப்பட்டன.
//
50% இட ஒதுக்கீடு! நல்ல விஷயம் தான்! தங்கள் விளக்கத்துக்கு நன்றி சேதுக்கரசி. இருப்பினும் புயலுக்கு வைக்கப்படும் பெயரில் ஆண்கள் பெயர் பிரபலமடைவதில்லையே :-(
//
repeatu. oru varusham pengalin peyarum, maru varusham aangalin peyarum vaipathu valakkam.
//
நன்றி ட்ரீம்ஸ், தாங்கள் அப்படியே புயலுக்கு சூட்டப்பட்ட சில ஆண் பெயர்களை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ;-)
//நான் கூட இது மாதிரி இயற்கை சீற்றத்தின் போது அருகில் இருக்க ஆசைப்படுவேன்.//
சீக்கிரம் திருமணமாக வாழ்த்துக்கள் !!
சூறாவளி மற்றும் புயல்காற்றுப் பகுதிகளில் நான் இருந்ததில்ல.
//ரெம்ப அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா??//
அச்சோ இப்படி சொல்லாதீங்க, சூறாவளி, புயலால் பாதிக்கப்படறவங்க பாவம்... சமீபத்தில் கூட டென்னஸ்ஸீ, கென்ட்டக்கி மாநிலங்களில் புயல்காற்றால் (tornado) அதிகமான பொருட்சேதம், உயிர்ச்சேதம்...
//புயலுக்கு வைக்கப்படும் பெயரில் ஆண்கள் பெயர் பிரபலமடைவதில்லையே :-(//
ரொம்பப் பொலம்பாதீங்க :-) நான் குறிப்பிட்டபடி 1999ல் Hurricane Floyd ரொம்ப பேமஸ். Floyd என்பது ஆண்பால் பெயர். அந்த சூறாவளியால்தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய evacuation நடந்ததுன்னு குறிப்பிட்டிருக்கேனே.. இப்ப போதுமா உங்களுக்கு? :-))
//
சீக்கிரம் திருமணமாக வாழ்த்துக்கள் !!
//
அதுக்காகதான களப்பிராரே, நாம சூராவளியை விட வேகமா சுழன்று கொண்டிருக்கிறோம். சும்மா சுத்துனதுதான் மிச்சம்.
// விட வேகமா சுழன்று கொண்டிருக்கிறோம//
சூராவளியை சூறாவளி வேகத்திலேயே சந்தியுங்கள் .....
//
அச்சோ இப்படி சொல்லாதீங்க, சூறாவளி, புயலால் பாதிக்கப்படறவங்க பாவம்... சமீபத்தில் கூட டென்னஸ்ஸீ, கென்ட்டக்கி மாநிலங்களில் புயல்காற்றால் (tornado) அதிகமான பொருட்சேதம், உயிர்ச்சேதம்...
//
நிச்சயம் சூராவளியால் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனைக்குறியது. தமிழ் நாட்டிலோ, நான் வசித்த ஐரோப்ப நாட்டிலோ இது போல கண்டதில்லை அதனால் இதன் உண்மையான விளைவுகளைப்பற்றி எனக்கு தெரியாது (Tornado Warning, Twister போன்ற ஆங்கிலப்படங்களில் பார்த்ததோடு சரி). நான் சூராவளியை (பதிவில் உள்ள படத்திலுள்ள பெண் போல) தூரமாக நின்று வேடிக்கை பார்கவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். Hurricane என்ற ஃபஸ்ட் நேம் காரணத்தால் நான் Floyd என்ன பெயரை கவனிக்காமல் விட்டு விட்டேன் :-( தெளிவுபடுத்தியமைக்கு நன்றி திரு. சேதுக்கரசி.
இந்த மொக்கை பதிவுக்கு இம்புட்டுநேர விவாதமா.... டூ மச்..
//
இந்த மொக்கை பதிவுக்கு இம்புட்டுநேர விவாதமா.... டூ மச்..
//
இது விவாதம் இல்லை மிஸ்டர் களப்பி, இதுக்குப்பேரு விளக்கம்!!
//இந்த மொக்கை பதிவுக்கு இம்புட்டுநேர விவாதமா.... டூ மச்..//
ஆகா எங்கேயோ புகையுது போல :-)))
களப்பிராரே, Bloggerக்கு தங்கள் மேல் என்ன கோபமோ தெரியவில்லை தங்களது இந்த பின்னூட்டத்தை அனுமதித்த பிறகும் காட்ட மறுக்கின்றது!
///
களப்பிரர் said...
// விட வேகமா சுழன்று கொண்டிருக்கிறோம//
சூராவளியை சூறாவளி வேகத்திலேயே சந்தியுங்கள் .....
///
நல்ல அலசல்!
தங்களைப் போன்ற நட்சத்திரம் மாலைப் பொழுதில் தோண்றியிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!
Post a Comment