சிறு வயதில் தட்டான் பிடிப்பது (உயிரோடு) என்பது ஒரு கலை. அது எனக்கு கைவந்த கலையாக இருந்தது. சமீபத்தில் எங்கள் வயலுக்கு சென்றிருந்த போது, இன்னும் எனக்கு அந்த திறமை இருக்கிறதா என சோதித்து பார்க்க விரும்பினேன்... மெதுவாக அமர்ந்து ஒரு தட்டானை நோக்கி கையை வீசினேன், அழகாக கைக்குள் சிக்கிக்கொண்டது! லேசாக காலரை தூக்கிவிட்டுக்கொண்டேன்.

தட்டானை கையில் எடுத்தபோதுதான் அதை பார்த்தேன்! தட்டானுக்கு சட்டைபோட்டால் எப்படியிருக்கும் என்று தெரியாது ஆனாலும் தட்டான் முட்டைபோட்டால் எப்படியிருக்கும் என மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக எடுத்தேன் மொபைலை கிளிக்கினேன் இந்த படத்தை!! (பெரிதாக காட்ட படத்தின் மீது சொடுக்கவும்)



பி.கு: யாரும் தயவு செய்து புளூகிராஸில் சொல்லிவிடாதீர்கள் (என் கிரகம் பிடிபட்ட தட்டானும் ப்ளூ கலரில் இருக்கிறது!)

3 மறுமொழிகள்:

Chandravathanaa said...

தட்டான் என்றா சொல்வீர்கள்.
நாங்கள் தும்பி என்போம்.

தட்டான் என்றால் எங்கள் ஊரில் தங்கத்தில் நகைகள் செய்யும தொழில் செய்பவர்களையே குறிக்கும (பொற்கொல்லர்)

கருப்பன் (A) Sundar said...

வாருங்கள், சந்திரவதனா(சங்க கால பெயர் போல் நன்றாக இருக்கிறது), எங்கள் ஊரில் 'தட்டான்'தான். தும்பி என்பது புத்தகத்தமிழ் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பேச்சு வழக்கிலும் இருப்பது இப்போது தான் தெரிகிறது. 23ம் புலிகேசி படத்தில் வரும் தட்டானுக்கு சட்டைபோட்டால் காமடி(?) இந்த தட்டானுக்கு தான். பொற்கொல்லனுக்கு அல்ல!!

Unknown said...

//மெதுவாக அமர்ந்து ஒரு தட்டானை நோக்கி கையை வீசினேன், அழகாக கைக்குள் சிக்கிக்கொண்டது!//
நாங்கள் தட்டான் பிடிக்க பூணை மாதிரி அதன் பின்னால் அமர்ந்து அதற்குத் தெரியாமல் அதன் வாலைப் பிடித்து, பின் இறக்கையைப் பிடித்துத் தூக்குவோம். நீங்க கையை விசிறி பிடித்து அழுத்தியதில் அதன் வயிற்றிலிருந்த முட்டை வெளி வந்து விட்டது போலிருக்கிறது.

கவலையற்றிருந்த பால்ய கால நினைவுகள்.