அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு போன்ற ஊனமில்லாமல் பிறப்பது என்று நம் தமிழ் பாட்டி ஒரு காலத்தில் கூறினார். நம் காலத்தில் அரியது கேட்கின்... அரிது அரிது நல்ல மொபைல் கிடைப்பதரிது, அதனினும் அரிது கிடைத்த மொபைலை பாதுகாப்பாக வைத்திருப்பது!! கைப்பேசியை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் எனக்கு தெரிந்த சில குறிப்புகளை மக்களுக்கு கூறவே இந்த பதிவு.



வாங்குவது குறித்த குறிப்புகள்
1. கடைக்கு செல்வதற்கு முன்பே இனையத்தில் நன்றாக தேடி நல்ல ஒரு மாடலும், பிரான்டும் செலக்ட் செய்து கொள்ளுங்கள். தேடும் போது முக்கியமாக உங்கள் மொபைல் உபயோகத்தன்மையை நன்றாக சிந்தித்துக்கொள்ளுங்கள். அதாவது, "எதற்காக எனக்கு மொபைல்?" என்ற கேள்வியை உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள். சிலருக்கு புகைப்படம் எடுக்கும் கருவியாக இருக்கவேண்டும், சிலருக்கு இனையம் உலாவும் கருவியாக இருக்கவேண்டும், சிலருக்கு எஸ்.எம்.எஸ் கருவி. இது உங்களுக்கு எந்த மாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற மெகா குழப்பத்துக்கு முடிவு கட்டும்.

2. நோக்கியா போன்ற பெயர் பெற்ற கம்பனி மொபைல்களின் பாதிவிலை அந்த கம்பனியின் பெயருக்காக என்பதை மனதில் வையுங்கள். SE, Motorola, LG போன்ற மற்றவர்களின் மொபைல்களைபற்றியும் படித்துப்பாருங்கள்.

3. குறைந்தது இரண்டு மூண்று கடையிலாவது, விசாரித்துக்கொள்ளுங்கள். விலை குறைப்பு, இலவச மெமரி கார்டுகள் போன்றவை சில கடைகளில் இருக்கும் சிலவற்றில் இருக்காது. புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பல மொபைல்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்!

4. மெபைல் வாங்கும் போது அட்டைப்பெட்டியின் சீல் சேதமில்லாமல் இருக்கிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக ரசீதுடன் வாங்குங்கள். மொபைல் அட்டைப்பெட்டியையும், ரசீதையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். தயவு செய்து அட்டைப்பெட்டியை தொலைத்துவிட, தூக்கிப்போட வேண்டாம்!!! (பின்பு கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும்)

5. மொபைல் வாங்கும் போது, அதன் Accessories அதனுடனே வருகிறதா என பாருங்கள். சில நோக்கியா மொபைல்களுக்கு, Hands-free, data cable, memory card நீங்கள் தனியாக வாங்கவேண்டியிருக்கும்!

பயன்படுத்துதல் குறித்தவை



1. உபயோகிக்கும் போது பக்கவாட்டில் பிடிக்க வேண்டும், குறைந்த பட்சம் விரல்கள் மொபைல் பின் பகுதியின் மேல் பாகத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படத்தில் நம்ம கோழியார் பிடித்திருப்பது போல. இது ஆன்டனாவில் இருந்து வெளிப்படும் சிக்னல்கள் உங்கள் விரல்களால் தடுக்கப்படாமல் இருக்க உதவும்.

2. தெருவோரங்களில் விற்க்கும் Flash LEDs வாங்கி மொபைல் ஆன்டனா மேல் ஒட்டுவது, வடிகட்டிய முட்டாள்தனம். உங்கள் மொபைலில் இருந்து வெளிப்படும் ஆற்றலை தேவையற்ற வண்ண வண்ண ஒளியாற்றலாக மாற்றி என்ன பயன்? உங்கள் மொபைலுக்கு சிக்னல் சரியாக கிடைக்காமல் போவதோடு, பேட்டரியும் விரைவாக தீர்ந்துவிடும்.

3. உங்கள் பேட்டரியின் தன்மை அறிந்து சார்ஜ் செய்ய வேண்டும். Li-Ion பேட்டரிகளை நீங்கள் முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்து பின் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை, மேலும் இந்த வகை பேட்டரி கொண்ட பல மொபைல்களை நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சார்ஜரில் சொருகி வைக்கலாம். Ni-Cad பேட்டரிகள் கொண்ட மொபைல்களை நன்றாக டிஸ்சார்ஜ் ஆன பிறகு சார்ஜ் செய்யவேண்டும், முழுவதுமாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜரில் இருந்து எடுத்து விடவும்.


4. ஆண்கள், மொபைலை வைக்கும் Pocketக்குள் சாவி கொத்து, சிகரட் லைட்டர்கள் போன்ற எந்த பொருளையும் வைக்க கூடாது. பெண்கள் கைப்பைக்குள் மொபைலை வைக்கும் போது வேறு கடினமான பொருட்களுடன் உரசாதவாறு வைக்கவும்.

5. திரையில் விழும் கீறல்களை தடுக்க பாலிதீன் Screen Guardகளை வாங்கி திரைமீது ஒட்டலாம்.

6. மொபைல்களில் தொடர்ந்து கேம் விளையாடுவதை தவிர்கவும். இதனால் உங்கள் கீப்பேட்கள் சீக்கிரம் கெட்டுவிடும்.

7. மொபைலை கீழே போட்டு விளையாடும் கெட்ட விளையாட்டு கூடவே கூடாது!!!

8. மொபைலில் பேசும் போது, மொபைலில் பேசுங்கள், அதாவது மொபைலை காதில் வைத்துக்கொண்டு பேச்சை நேரடியாக டெலிகாஸ்ட் செய்யாதீர்கள். உங்கள் கூச்சல் மற்றவர்களுக்கு பெரும் தலைவலி என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். மக்கள் அதிகம் கத்துவது மொபைல் போன் செட்டிங்கில் உள்ள தவறால்தான். மொபைலில் உள்ள ஒலியளவை நீங்கள் இருக்கும் இடத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள். ஆபீஸ் போன்ற அமைதியான இடங்களில் குறைவாகவும், சந்தை போன்ற இடங்களில் அதிகமாகவும் வைத்துக்கொண்டால் கத்தாமல் பேசலாம்.

9. Blue tooth, IR முதலியவற்றை எப்போதும் off செய்து வைக்கவும் . தேவை ஏற்படும் போது ON செய்து கொண்டு வேலை முடிந்த உடனே off செய்யுங்கள்!!

கைபேசி மற்றும் உங்கள் பாதுகாப்பு
1. வாகனம் ஓட்டும் போது உபயோகிப்பது தற்கொலைக்கு சமம். நீங்கள் உருப்டியாக ஊரு போய் சேர்வதை தவிற வேறு முக்கியமான விஷயம் எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளவும். தவிர்க்க முடியாத சூழலில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பின் பேசலாம்.

2. மொபைல் தொலைந்து விட்டால், திருடப்பட்டுவிட்டால் உடனே Service providerக்கு செய்தியை சொல்லி SIM கார்டை invalid ஆக்கிவிடவேண்டும். உங்கள் மொபைல் சட்டத்துக்கு புறம்பான காரியங்களில் பயண்படுத்த படலாம். நிச்சயமாக போலீஸிடம் தகவல் தெரிவிக்கவும். (பட்டாப்பட்டி டவுசரோட சிலேட்டில் பெயரை எழுதி ஸ்டேசனில் அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் குடுக்கும் லட்சியம் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்!). இந்த இடத்தில் தான் உங்கள் பில் கைகொடுக்கும்!! உங்கள் IMEI நம்பர், மொபைல் அட்டைப்பெட்டி மேல் அச்சிடப்பட்டிருக்கும்.

3. கண்ட இடத்தில் மொபைலை வைத்துவிட்டு போகாதீர்கள். ஹோட்டல்களில் சாப்பிடும் போது மேஜை மேல் வைக்காதீர். ஆண்கள் சட்டை பாக்கெட்டில் வைக்க வேண்டாம்.

4. தயவு செய்து மொபைல்களை பாத்ரூம்/டாய்லட்டுக்குள் எடுத்துச் செல்லாதீர்கள். நீர் அதிகம் உள்ள இடங்களுக்கு போகும் போது பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு செல்லுங்கள்.

5. Mobile usage ethics, கடைபிடியுங்கள். சினிமா தியேட்டர், இரவு நேர ரயில் பயணம், மருத்துவமனை, போன்ற அமைதியான இடங்களில் உபயோகிக்க வேண்டாம்.

பி.கு: "பேராண்டி, ஒலகத்துல ஓசியா கெடைக்கிறதும், ஓசியா குடுக்குறதும் அட்வைசு மட்டும்தான்டா!"னு எங்க ஆத்தா சொல்லியிருக்கா... அதான் கொஞ்சமா அட்வைசை அள்ளித்தெளிச்சுட்டேன். திட்டுறதுனா திட்டிக்கங்க, அதைவிட்டுட்டு படக்குனு கடைக்கு ஓடிப்போய் ஒரு எழுமிச்சம்பழமும், குங்கும பாக்கெட்டும் வாங்கி செய்வினை வைக்கிற வேலையெல்லாம் வேணாம்... ஒடம்பு தாங்காது.

25 மறுமொழிகள்:

லக்கிலுக் said...

இன்று தமிழ்மணத்தில் படித்த ஒரே ஒரு உருப்படியான பதிவு இது மட்டுமே!

நன்றி!!

Anonymous said...

ரொம்பவும் பயனுள்ள பதிவு!

/// இன்று தமிழ்மணத்தில் படித்த ஒரே ஒரு உருப்படியான பதிவு இது மட்டுமே! ///

வசிஷ்டர் வாயேலேயே பிரம்மரிஷி பட்டம் வாங்கியிருக்கீங்க கருப்பன்.
கலக்குங்க.

கருப்பன் (A) Sundar said...

வாருங்கள், லக்கிலுக் தங்களை போன்ற வலையுலக பெரியவர்கள், வருகையால் மகிழ்ச்சியடைந்தோம்!!

//
வசிஷ்டர் வாயேலேயே பிரம்மரிஷி பட்டம் வாங்கியிருக்கீங்க கருப்பன்.
கலக்குங்க.
//
சரியா... சொன்னீங்க வெயிலான். வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

Anonymous said...

//வசிஷ்டர் வாயேலேயே பிரம்மரிஷி பட்டம் வாங்கியிருக்கீங்க கருப்பன்.
கலக்குங்க.//

:)) நாதஸ் காமெடி ஞாபகத்துக்கு வருது. கெரகம்டா சாமி.

Unknown said...

நீங்கள் உருப்டியாக ஊரு போய் சேர்வதை தவிற வேறு முக்கியமான விஷயம் எதுவுமில்லை

Super!!!

Anonymous said...

very good post and valuble research u made for this ... shall i copy it. drpsenthil@rediffmail.com

மதுரைவீரன் said...

நண்பரே, நல்ல தகவல். நன்றி.

மண்வெட்டியான் said...

மூணாம் படத்தில் உள்ள பாப்பா யாரப்பா ???

கருப்பன் (A) Sundar said...

எல்லாம் நம்ம பக்கத்து வீட்டு பாப்பா தான் மண்வெட்டியான்.

ஆனந்த குமார்,
மதுரைவீரன்,
செந்தில்,
மண்வெட்டியான் தங்கள் வருகைக்கு நன்றி.

மாதங்கி said...

பயனுள்ள செய்திகள்
விவரங்களுக்கு நன்றி

Divya said...

பயனுள்ள பல தகவல்களை தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள், நன்றி கருப்பன்!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பயனுள்ளதும்,ரசிக்கும்படியானதுமான பதிவு.

கருப்பன் (A) Sundar said...

செந்தில், தாராளமாக பயன்படுத்துங்கள், எனக்கு காப்பிரைட்டில் பெரிய பிடிப்பெல்லாம் கிடையாது.

மாதங்கி, திவ்யா, அறிவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

மேலும் சில பயனுள்ள தகவல்கள் .நண்பர்களின் ஆரோக்கியம் சார்ந்த tips.
1.அலைபேசி(cell phone) பேசும் போது இடது காதை உபயோகப்படுத்தவும்.(வலது காது danger)
2.ஒரு நாளைக்கு அதிக பட்சம் ஒரு மணி நேரம் பேசுவதே அதிகம்.
3.கூடுமானவரை தரை வழி சேவை தொலைபேசி களை (land line ordinary phone)உபயோகிப்பது உங்கள் காதுக்கும் மூளைக்கும் பாதுகாப்பு(அறிவியல் சார்ந்த உண்மை)
4.நண்பர்கள் எண்களை அழைக்கும்போது speaker on செய்து அவரின் குரல் கேட்ட பிறகு speaker ஐ off செய்து பேசவும்.
5.family,office,vips,others தனித்த்னி group ஆக செய்து ஒவ்வொரு குழுக்கும் ஒரு தனி tone வைத்துக்கொள்வது நன்மை பயக்கும்.
6.s.m.s வரும் செய்திக்கான ஒலியை ஒரு பீப் ஒலி போல் அமைத்தால் நல்ம்.

கருப்பன் (A) Sundar said...

தகவல்களுக்கு நன்றி திரு. நெல்லை அவர்களே.

//
1.அலைபேசி(cell phone) பேசும் போது இடது காதை உபயோகப்படுத்தவும்.(வலது காது danger)
2.ஒரு நாளைக்கு அதிக பட்சம் ஒரு மணி நேரம் பேசுவதே அதிகம்.
3.கூடுமானவரை தரை வழி சேவை தொலைபேசி களை (land line ordinary phone)உபயோகிப்பது உங்கள் காதுக்கும் மூளைக்கும் பாதுகாப்பு(அறிவியல் சார்ந்த உண்மை)
4.நண்பர்கள் எண்களை அழைக்கும்போது speaker on செய்து அவரின் குரல் கேட்ட பிறகு speaker ஐ off செய்து பேசவும்.
//
மேல் காணும் குறிப்புகளுக்கு காரணம் தெரிந்தால் மக்களுக்கு கொஞசம் வசதியாக இருக்கும்.

களப்பிரர் - jp said...

// 1.அலைபேசி(cell phone) பேசும் போது இடது காதை உபயோகப்படுத்தவும்.(வலது காது danger) //

ஏன் சார் ???? வலது காது நரம்பு எல்லாம் வீக் ஆ ???

//2.ஒரு நாளைக்கு அதிக பட்சம் ஒரு மணி நேரம் பேசுவதே அதிகம்.//

கஸ்டமர் சப்போர்ட் ல வேல செயரவனுங்க எல்லாம் பாவம் தான்...

// 3.கூடுமானவரை தரை வழி சேவை தொலைபேசி களை (land line ordinary phone)உபயோகிப்பது உங்கள் காதுக்கும் மூளைக்கும் பாதுகாப்பு(அறிவியல் சார்ந்த உண்மை) //

நீங்களே எழுதுன அறிவியல் புக் கா ??

//4.நண்பர்கள் எண்களை அழைக்கும்போது speaker on செய்து அவரின் குரல் கேட்ட பிறகு speaker ஐ off செய்து பேசவும்.//

அப்ப தான் பக்கத்துல இருக்க உங்க அம்மாவுக்கு, உங்களுக்கு மனைவி இடம் இருந்து எத்தன தடவ அழைப்பு வருதுன்னு தெரியும்...


//5.family,office,vips,others தனித்த்னி group ஆக செய்து ஒவ்வொரு குழுக்கும் ஒரு தனி tone வைத்துக்கொள்வது நன்மை பயக்கும். //

சமயத்துல ஆபிஸ் ல வேல பாக்குறவன் பிரண்டாவும் இருந்து தாவ தீக்குரனுங்க ...

6.s.m.s வரும் செய்திக்கான ஒலியை ஒரு பீப் ஒலி போல் அமைத்தால் நல்ம்.

// உங்க 'personalization / preferences' எல்லாம் உங்களோட வச்சுக்கங்க சார். பக்கத்துல இருக்குறவனுக்கு தொல்லை இல்லாம எப்படி பேசுனாலும் , எந்த ஒலிய வச்சிகிட்டாலும் சரித்தான் ....

Unknown said...

Why should you answer phone calls with your left ear?
-------------------------

.

When you try to call through mobile phone, do not put your mobile closer to your ears until the recipient answers.The reason is directly after dialing, the mobile phone would use it's maximum signaling power, which is:2watts = 33dbi!!!! . So Please be careful.Please use LEFT EAR while using cell phone [mobile] and save your brain,because if you use the RIGHT EAR it will affect brain directly.
-----------------------------
i will post other scientific facts for other points.
-----------------------------------

Unknown said...

ALWAYS USE LEFT EAR FOR MOBILE PHONES

Please use left ear while using cell (mobile), because if you use the right one it will affect brain directly. This is a true fact from Apollo medical team. Please forward to all your well wishers

Unknown said...

களப்பிரர் said...
//ஏன் சார் ???? வலது காது நரம்பு எல்லாம் வீக் ஆ ???//
மருத்துவ ஆராய்ச்சியாளார்களின் கருத்து இது.வலது காதை உபயோகித்தால் மூளையில் கட்டி வர வாய்ப்புள்ளதாக ஒரு தகவல்.
//கஸ்டமர் சப்போர்ட் ல வேல செயரவனுங்க எல்லாம் பாவம் தான்...//
அவர்கள் head phone or mike with speaker வசதிகளை பயன் படுத்தி ஒரளவுக்கு பாதிப்பிலிருந்து தங்கள் உடல் நலத்தை காப்பது அவசியம்.

//சமயத்துல ஆபிஸ் ல வேல பாக்குறவன் பிரண்டாவும் இருந்து தாவ தீக்குரனுங்க//
அவர்களை தனி group ஆக்கி சமாளிக்கவும்
//நீங்களே எழுதுன அறிவியல் புக் கா ??//
உங்களுக்கு அலைபேசியில்(incoming call for your mobile phone)அழைப்பு வரும் போது உங்கள் computer vdu (monitor) படும் பாட்டை(வைகைப் புயல் வடிவேல் /அடிவாங்க்குவது போல்)அடுத்த முறை கவனிக்கவும்.

//அப்ப தான் பக்கத்துல இருக்க உங்க அம்மாவுக்கு, உங்களுக்கு மனைவி இடம் இருந்து எத்தன தடவ அழைப்பு வருதுன்னு தெரியும்//
இது யோசிக்கப்படவேண்டிய ஒன்று.
"அது சமயத்தில் காது போனால் என்ன,மூளை பாதித்தால் என்ன "
பேசாமல் கவனமாக speaker ஐ off செய்தல் நலம்..

// உங்க 'personalization / preferences' எல்லாம் உங்களோட வச்சுக்கங்க சார். பக்கத்துல இருக்குறவனுக்கு தொல்லை இல்லாம எப்படி பேசுனாலும் , எந்த ஒலிய வச்சிகிட்டாலும் சரித்தான் ....//
---------------------------------
நன்பரின் இந்த கருத்தை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

களப்பிரர் - jp said...

இந்த மொக்க பதிவுக்கு இம்புட்டு நேரம் செலவழிக்க வேண்டியதா போச்சு..

60 வருசமா ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்காங்கலாமப்ப .... இதுவர 'ரேடியோ' கதிர்களால் ஒரு ஆபத்தும் இல்லைன்னு தான் சொல்லுறாங்க...

any way have a look at the link
http://www.ericsson.com/ericsson/corporate_responsibility/health/index.shtml

அப்பலோ ஹாஸ்பிடல் மேட்டர் ஒரே பெரிய ஹோக்ஸ் ....
அவனுங்க இதுவரைக்கும் பண்ணிக்கிட்டு இருக்குற ஒரே ரிசர்ச் " இன்னும் எப்படி எல்லாம் பில் போட்டு கொள்ளை அடிக்கலாம்" ன்றது மட்டும் தான்...

//The reason is directly after dialing, the mobile phone would use it's maximum signaling power, which is 2 watts//

the phone can use 2watt power when ever it is needed (for eg, if the phone is far away from the base station, 'for the paging response' and so on. but this 2 watt electromagnetic power is - so far proved - safe. considering the fact that we are surrounded by hundreds of electromagnetic energy fields ( radio, tv signals, satellite signals, blue tooth, wlan, cosmic..) , the energy from the phone is one more signal to live with.
( of course the electromagnetic signals will have impact, if the energy level is high and proximity is less...)

Unknown said...

Mobile phones could kill far more people than smoking or asbestos, a study by an award-winning cancer expert has concluded. He says people should avoid using them wherever possible and that governments and the mobile phone industry must take "immediate steps" to reduce exposure to their radiation.


The study, by Dr Vini Khurana, is the most devastating indictment yet published of the health risks.

It draws on growing evidence – exclusively reported in the IoS in October – that using handsets for 10 years or more can double the risk of brain cancer. Cancers take at least a decade to develop, invalidating official safety assurances based on earlier studies which included few, if any, people who had used the phones for that long.

Earlier this year, the French government warned against the use of mobile phones, especially by children. Germany also advises its people to minimise handset use, and the European Environment Agency has called for exposures to be reduced.

Professor Khurana – a top neurosurgeon who has received 14 awards over the past 16 years, has published more than three dozen scientific papers – reviewed more than 100 studies on the effects of mobile phones. He has put the results on a brain surgery website, and a paper based on the research is currently being peer-reviewed for publication in a scientific journal.

He admits that mobiles can save lives in emergencies, but concludes that "there is a significant and increasing body of evidence for a link between mobile phone usage and certain brain tumours". He believes this will be "definitively proven" in the next decade.

Noting that malignant brain tumours represent "a life-ending diagnosis", he adds: "We are currently experiencing a reactively unchecked and dangerous situation." He fears that "unless the industry and governments take immediate and decisive steps", the incidence of malignant brain tumours and associated death rate will be observed to rise globally within a decade from now, by which time it may be far too late to intervene medically.

"It is anticipated that this danger has far broader public health ramifications than asbestos and smoking," says Professor Khurana, who told the IoS his assessment is partly based on the fact that three billion people now use the phones worldwide, three times as many as smoke. Smoking kills some five million worldwide each year, and exposure to asbestos is responsible for as many deaths in Britain as road accidents.

-----------------------------
இதைப் போல் அறிவியல் சார்ந்த சோதனைகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. அலைபேசியின்.உபயோகத்தால் வரும் பேராபயம்(காது கேளாத்தன்மை,மூளைக்கட்டி) 10 வருடங்கள் கடந்த பின் தெரிய வரும் என அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.\----------

எனவே அலைபேசி உபயோகத்தை
தேவையான அளவு மட்டும் (இடது காது, speaker, usuage-tips)செயல் படுத்தி நமது நலத்தையும்,நண்பர்கள் நலத்தையும் காப்போம்.

Anonymous said...

ஒரு படப்பதிவு,cell phone danger பற்றி.கீழே கொடுத்துள்ள link பயன் படுத்தவும்.மேலும் பல உண்மைகள் அங்கே படக் காட்சிகளாக காணக் கிடைகிறது.

http://www.youtube.com/watch?v=MSPb-8XtdzI

Anonymous said...

லக்கிலுக் said...
இன்று தமிழ்மணத்தில் படித்த ஒரே ஒரு உருப்படியான பதிவு இது மட்டுமே!

வெயிலான் said...
ரொம்பவும் பயனுள்ள பதிவு!

/// இன்று தமிழ்மணத்தில் படித்த ஒரே ஒரு உருப்படியான பதிவு இது மட்டுமே! ///

வசிஷ்டர் வாயேலேயே பிரம்மரிஷி பட்டம் வாங்கியிருக்கீங்க கருப்பன்.
கலக்குங்க.
மதுரைவீரன் said...
நண்பரே, நல்ல தகவல். நன்றி.
மாதங்கி said...
பயனுள்ள செய்திகள்
விவரங்களுக்கு நன்றி
அறிவன்#11802717200764379909 said...
பயனுள்ளதும்,ரசிக்கும்படியானதுமான பதிவு.
Divya said...
பயனுள்ள பல தகவல்களை தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள், நன்றி கருப்பன்!!

*******************************
களப்பிரர் said...
இந்த மொக்க பதிவுக்கு இம்புட்டு நேரம் செலவழிக்க வேண்டியதா போச்சு
***********************************
"களப்பிரர் காலம் கற்காலம்"
எங்கோ கேட்ட ஞாபகம்
ஒரு நல்ல, பிறர் நலம் பேணும் ,பதிவின் மேல் ஏன் இந்த கசப்பு உணர்வு(வலையுலக மேதைகளே பாராட்டிய பிறகு.........)

Anonymous said...

இடது காதால் ஹலோ!
அடுத்த முறை கைப்பேசியில் அழைப்புவந்தால் இடது காதால் மட்டும் ஹலோ சொல்லுங்கள். அப்பல்லோ மருத்துவ குழுவினர் சொல்கின்றார்கள். மின்னஞ்சலில் வந்தது.படம் கீழே.

அப்படியே ரொம்ப நேரமாய் கைப்பேசியை காதிலேயே வைத்திருப்பதும் நல்லதில்லையாம். புளூடூத்தோ அல்லது ஒரு ஹெட்செட்டோ அல்லது ஸ்பீக்கர் போனோ பயன்படுத்தி கைப்பேசியை சற்று தூரமாய் வைத்திருத்தல் நல்லது.

ஆண் மகன்கள் தங்கள் கால்சட்டைப்பையில் அலைப்பேசியை ரொம்பநேரமாய் வைத்திருத்தல் நல்லதில்லையாம். "எதிர்காலத்துக்கு" மிகப் பக்கத்தில் இது போன்ற அலைவீச்சுக்கருவிகள் இருப்பது நல்லதில்லை என்கின்றார்கள்
(courtesy:pkp.in)

நெல்லை சிவா said...

நல்ல பதிவு.

மொபைல் குறித்த எனது சில பதிவுகள்:

http://vinmathi.blogspot.com/2008/04/blog-post.html

http://vinmathi.blogspot.com/2008/05/chester.html