இது பர்வீன் டிராவல்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவியை பற்றிய உண்மைக்கதை (கொஞ்சம் காமடியான கதை)! அந்த அப்பாவி வேற யாரும் இல்லைங்க நானே தான்!!

அது ஜூன் மாதம் 30, 2006; நானும் என் தங்கையும் பெங்களூரில் இருந்து மதுரைக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். நாங்கள் பர்வீன் டிராவல்ஸில் டிக்கட் எடுத்திருந்தோம். டிக்கட்டில் பஸ் 9:40 PM க்கு மடிவாலாவில் பிக்கப் செய்யும் என எழுதியிருந்தது. நாங்கள் மடிவாலாவுக்கு 9:20 க்கு வந்து சேர்ந்தோம் (ஆனால் ரிப்போர்டிங் டைம் 9:00 என்று டிக்கட் சொல்லியது). பர்வீன் ஆபீசுக்கு சென்று அங்கு அமர்ந்திருந்தவரிடம் டிக்கட்டை காட்டினேன், அவன் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் "கொஞ்சம் பொறுங்கள் பஸ் வந்து கொண்டிருக்கிறது" என்றான். பக்கத்தில் ஒருவர் சென்னை டிக்கட்டை காண்பித்துக்கொண்டிருந்தார், அவருக்கும் இதே பதில்! அவன் டிக்கட்டை கூட பார்க்காமல் சொன்னதும் அவருக்கு ஆச்சர்யம், நிச்சயம் மூஞ்சியில் "இவர் 8,30 பஸ்ஸில் சென்னை போகிறார்" என்று எவனும் எழுதி ஒட்டிவிட்டானா என்று கண்ணாடியில் பார்த்திருப்பார். ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் பர்வீனில் பயணிக்கும் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று!

இருப்பினும் சில அப்பாவி பயணிகள் ஆபீஸ் முன் தங்கள் காத்திருத்தல் விளையாட்டை ஆரம்பித்தனர்!! நான் கடைக்கு சென்று தண்ணீர் வாங்கிக்கொண்டு என் தங்கை கொண்டு வந்த நூடுல்ஸை சாப்பிட ஆரம்பித்தேன். மீண்டும் பர்வீன் ஆபீசுக்கு 9,55க்கு வந்தோம், அங்கு ஒருவர் அந்த ஆபீஸ் அட்டன்டன்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தார், விவாதம் சூடாக இருக்கவே நின்று கேட்க தொடங்கினேன்...

பயணி: யோவ் என் பஸ் 9,00 மணிக்கு வரவேண்டியது
பணியாள்: இந்தா வந்துரும் சார்
பயணி: எப்போ??
பணியாள்: சார் உங்களுக்கு பெங்களூர் டிராஃபிக் பத்தி தெரியாதா என்ன?
பயணி: அப்ப என்ன எழவுக்குயா 8,30 க்கு வரனும்னு சொன்னீங்க??
(பாவம் இந்த அப்பாவி டிக்கட்டில் எழுதியிருக்கும் Reporting Time என்ற காமடியை சீரியஸாக எடுத்துக்கொண்டார் போலும்)
பணியாள்: (எக்கச்சக்கமான மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடுப்பாகி) நான் பர்வீன்ல வேலை பாக்க வந்தேன் பாருங்க என்ன பிஞ்ச செருப்பாலையே அடிச்சுக்கனும்.
(சட்டென்று எழுந்து ஓட்டமும் நடையுமாக ஆபீஸுக்குள் நுழைந்து கொண்டார்)

மணி 9,58 ஒரு வழியாக 9 மணி பஸ் வந்து சேர்ந்தது, பின்னாலேயே 9,40 பஸ்!! உலக அதிசயம் VIII!!! நான் பஸ்சில் ஏறும் போது, கூட ஏறியவரின் டிக்கட்டை கவனித்தேன், அவரது டிக்கட்டில் பஸ் டைமிங் 9,30 என்று இருந்து கட்டணம் 400 ரூ-வாக இருந்தது. என் டிக்கட்டில் நேரம் 9,30 என்றும் கட்டணம் 500 ரூ என்றும் இருந்தது. எனக்கு அப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டது!! பின்பு தெரிந்து கொண்டேன் ஒரு ஒருவருக்கு ஒரு unique நேரமும் கட்டணமும் குறிக்கப்பட்டுள்ளது என்று. பஸ்ஸில் இட ஒதுக்கீட்டு குழப்பங்களுக்கும், அமளி துமளிக்கும் நடுவே ஒருவன் வந்து அனைவரிடமும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு போனான். அப்போது எங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை இது எப்பேர்பட்ட தந்திரம் என்பது!

பஸ் A/C செய்யப்பட்டிருந்தது, VOLVO பஸ்களை போல வெளியே உயரமாக இருந்தது இருப்பினும் இது VOLVO பஸ் இல்லை. உள்ளே மற்ற ஏர் பஸ்களை போல தாழ்வான இருக்கைகள் தான். இந்த பஸ்ஸெல்லாம் கவுந்தால் கவுத்துப்போட்ட ஆமை மாதிரி எந்திரிக்கவே முடியாது என்று தோண்றியது.

பஸ்சில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு அழகான 6 இன்ச் LCD டீவி இருந்தது (விமானத்தில் இருப்பதைப்போல!). அந்த வினாடியில் என் வாழக்கையில் பார்த்த சிறந்த பஸ் எது என்று கேட்டால் இந்த பஸ்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லியிருப்பேன்! ஒரு சக பயணி ஆர்வ மிகுதியால் ஏன்பா "இந்த டீவியை கொஞ்சம் போடுங்கப்பா" என்றார். டிரைவர் "சார் டீவியை போட்டா ஏசி ஓடாது" என்றதும் கடுப்பாகி அந்த பயணி "அப்ப பேசாம இஞ்சின நிருத்திருயா" என்றார். சிறிது நேரத்தில் பஸ் கிளம்பி ஓட ஆரம்பித்தது... நானும் முந்தய இரவில் ஆபீஸில் கண்முழித்து வேளை பார்த்த அசதியில் தூங்கிப்போனேன். பஸ் நிற்காமல் ஒடிக்கொண்டே இருந்ததை உணரமுடிந்தது.

மறுநாள் காலை 2,30 க்கு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது. என்ன நடக்கிறது என்று கீழே இறங்கிப்பார்தேன். அங்கே டிரைவர் ஒரு பெரிய கேன் எடுத்து டீசல் வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வண்டி சேலத்தை தாண்டிவிட்டது என நினைத்து சந்தோஷப்பட்டேன். மீண்டும் பஸ் கிளம்பியது நானும் வண்டியில் ஏறினேன். என் தங்கை தூக்கம் கலைந்து "எங்கணே இருக்கோம்" என்று கேட்டாள் நானும் சிரத்தையாக "சேலத்தை தாண்டி வந்துட்டோம்னு நினைக்கிறேன்" என்றேன். பிறகு இருக்கையில் அமர்ந்ததும் மொபைலை எடுத்து ஏரியா பார்த்த போது "Electronics City" என்று காட்டியது!!!! நாங்கள் இன்னும் பெங்களூரில்தான் இருந்தோம்!!!

5 மறுமொழிகள்:

TBCD said...

எப்பவுமே திகிலான அனுவத்தைக் கொடுப்பதில் பர்வீன், சர்மாவிற்கு இனை வேற எதுவும் கிடையாது.

நான் ஒரு முறை பெங்களூரிலிருந்து மதுரைச் செல்லும் போது, வண்டி, 40 கிமி வேகத்துக்கு மேல் போனால், சத்தம் வந்து வண்டி பிரச்சனைக்குள்ளாகி நின்றுவிட்டது.

ஓட்டுனர், அதனால் மெதுவாகவே ஓட்டினார், இத்தனைக்கும் 10.30க்கு பிடிஎம் பாலம் தாண்டி 5 கிமி தான் இருக்கும். பிரச்சனை என்றால் வேற வண்டி இல்லாவிட்டால், வண்டியயை சரி செய்யுங்கள் என்றால். சொல்லியாச்சு, மேலாளரிடம் நீங்க வேனா தொலைப்பேசித் திட்டுங்க என்று எண்ணைக் கொடுத்தார்..

கைப்பேசியில் அழைத்தால், பதில் அளிக்க மறுக்கிறார்..தப்பிக்கிறார்.

எப்படியே..ஓட்டுனர், ஏதோ செய்து வண்டியயைக் கிளப்பிக் கொண்டு, மதுரைக்கு வந்துச் சேர்த்தார்.

தமிழ்கத்து வண்டிகளில் கேபிஎன், சேவைகளில் மற்றவைகளை விட பரவாயில்லை..என்று நினைக்கிறேன்.

கருப்பன் (A) Sundar said...

வாருங்கள் TBCD அவர்களே, என் அடுத்த பாகத்துக்கான பாதி கதையை சொல்லி முடித்து விட்டீர்கள்!!

எனது அடுத்த பாகத்தில் பாருங்கள் பல திகில் நிறைந்திருக்கும் :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

Anonymous said...

matra bus companigalil thappu seithalum payanthu kondu poi solvargal.KPN bus companyil andha vyabaram ellam illai.edhavathu kettal thimir thanamana bathilthan varum.avargal ellam paramasivan kaluththil ulla pambugal.

மங்களூர் சிவா said...

என்னது இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 2.30வரை எலக்ட்ரானிக் சிடி தாண்டவில்லையா?????

பயங்கர திகிலா இருக்கே.