நேற்று வீட்டுக்கு ஃபோன் பண்ணி என் தம்பியிடம் பேசினேன், அம்மா எங்கேடா என்று கேட்ட போது, வீடு, குத்துவிளக்கு, பூஜை ஐட்டங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பதாக சொன்னான். என்னடா விசேஷம் என்று கேட்டேன். அதான் வருசம் பொறக்குதுல்ல என்றான். அடப்பாவி, அதான் தமிழ்நாட்டு கவர்மென்ட் தையில் தான் புத்தாண்டுனு சொல்லிருச்சுல்ல, என்றேன். அடப் போடா பைத்தியக்காரா, நடுவூர்ல பாதி பயபுள்ளைக்கு தமிழ்நாட்டுக்கு கவர்மென்ட் இருக்குறதே தெரியாது இதுல ஆணை வேறயா, என்றான்.
அப்போது தான் உறைத்தது தமிழக அரசாணை தமிழகத்துக்கு மட்டும் தானே, என்னைப்போல NRT (Non-Resident Tamils) க்கு அது பொருந்துமா?? பொருந்துதோ இல்லையோ எங்கள் வீட்டில் தமிழ்புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். டீவிகளில் என்னவென்றால் சித்திரையை முன்னிட்டு(?) என்று வழக்கம் போல "உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, திரைக்கே வராத..." என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆஹா தமிழக அரசாணையை டீவிகளும் மீடியாக்களும் மதிக்கும் விதம் சும்மா புல்லறிக்க வைக்குது. "புத்தாண்டு" என்ற வார்த்தைக்கு மட்டும் தமிழக அரசு தடைவித்திருக்கிறதோ என்றுதான் எண்ணத் தோண்றுகிறது!
எனவே இவ்வாறு Intertiaவிலிருந்து மீளாதவர்களுக்கும்(என் பெற்றோர் போல), தமிழக அரசாணை செல்லுபடியாக இடங்களில் வாழ்பவர்களுக்கும் (என் போல), தமிழக அரசாணை பற்றி அறியாதவர்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பி.கு: தி.மு கழக உடன்பிறப்புகள் கொதித்து எழ வேண்டாம், இந்த வாழ்த்துகள் தங்களுக்கானதல்ல!
Apr 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
31 மறுமொழிகள்:
who the hell is DMK to change the rules....
it's of course a new year for us !
Happy Tamil new year !
Viji
நையாண்டியுடன் இருந்தாலும் நல்ல கருத்து என்பதில் ஐயமில்லை. இந்த அரசுக்கு, ஏன் எந்த அரசுக்கும் என்ன உரிமை உள்ளது வெகு காலமாக இருந்து வரும் ஒரு நம்பிக்கையை மாற்றுவதற்கு?
- ராஜா
கருணாநிதி கொண்டு வரும் முன்னேற்ற திட்டங்களுக்கு அவரை எவ்வளவு பாராட்ட தோன்றுகிறதோ... அதே அளவுக்கு அவரை திட்ட தோன்றுகிறது, இது போன்ற முட்டாள்தனங்களை பார்க்கும்போது... பழம் தமிழர் எதை கொண்டாடினால் என்ன... தமிழின் பெயரால் இரண்டு விழாக்கள் கொண்டாடப்படுகிறன ... இப்போது இவர் ஒன்றே ஒன்று போதும் என கூறுகிறார்... எதிர்த்து பேசினால் பார்ப்பன், தமிழ் துரோகி என்பார்..
தை- தமிழர் திருநாளாகவும் சித்திரை - தமிழ் திருநாளாகவும் இருக்கட்டும்... கொண்டாட்டங்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவே.. சட்டம் போட்டு கொண்டாட வைக்க முடியாது...
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Happy Tamil New Year to all of you.
Ramya
முதல்வர் கருணாநிதி இந்தத் தமிழ் புத்தாண்டு விஷயத்தில் ஒரு துக்ளக்கைப் (சோ நடத்தும் பத்திரிக்கையல்ல, உண்மையான கோமாளி அரசன் துக்ளக்) போல் செயல்பட்டுள்ளார்.
சர்வதாரி ஆண்டில் சித்திரை முதல் நாளை புத்தாண்டாகவோ திருநாளாகவோ கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Who the hell say it Tamil New Year. just a day in a year thats all
//who the hell is DMK to change the rules....
it's of course a new year for us !//
The irony is that, it ain't changed by DMK rather it was by the Govt. of Tamil Nadu!!
Thanks for your visit Viji.
//
ஏன் எந்த அரசுக்கும் என்ன உரிமை உள்ளது வெகு காலமாக இருந்து வரும் ஒரு நம்பிக்கையை மாற்றுவதற்கு?
//
கழக உடன்பிறப்புகள், "உலகம் தட்டை என்று நம்பிய காலத்தில் உலகம் உருண்டை என்று கூறியபோது இதே போலதான் மக்கள் கொதித்து எழுந்தனர். இருப்பினும் இன்று உலகம் உருண்டை என்பது எல்லோராலும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளதல்லவா??" என்ற எதிர் வினாவை எழுப்புகின்றனர். இதற்கென்ன செய்வது சொல்லுங்கள் ராஜா?? வருகைக்கு நன்றி!
//
எதிர்த்து பேசினால் பார்ப்பன், தமிழ் துரோகி என்பார்..
//
வெவரந்தெரியாத புள்ளயா இருக்கீங்களே அனானி :-( 'All that are not NAZIs are JEWs' என்பது தங்களுக்கு தெரியாதா??!! கருத்துக்கு நன்றி அனானி.
//
தை- தமிழர் திருநாளாகவும் சித்திரை - தமிழ் திருநாளாகவும் இருக்கட்டும்... கொண்டாட்டங்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவே..
//
இது தான் நச்...
தங்கள் வாழ்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி ரம்யா!!
//
முதல்வர் கருணாநிதி இந்தத் தமிழ் புத்தாண்டு விஷயத்தில் ஒரு துக்ளக்கைப் போல் செயல்பட்டுள்ளார்.
//
இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல 'எலவ'சங்கள் விஷயத்திலும் அவர் போக்கு எனக்கு அப்படித்தான் தோண்றுகிறது! வேண்டுமானால் தங்கள் மதிநுட்பத்தை பயண்படுத்தி கலைஞருக்கு சில ஆலோசனை வழங்குங்கள் மன்னர் மன்னா!! தங்கள் வரவால் சபை பெரும் பேர் பெற்றது மன்னா நன்றி!! :-)
//
சர்வதாரி ஆண்டில் சித்திரை முதல் நாளை புத்தாண்டாகவோ திருநாளாகவோ கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
//
அட! தமிழ் நாள்காட்டிகளில் இன்னும் சித்திரையில் இருந்து தான் ஆண்டின் பெயர் மாறுகிறது. இதை தலைவர் மறந்தது எப்படி. உடனே அதற்க்கும் ஒரு சட்டத்தை கொண்டுவரவேண்டியதுதான்!! வருகைக்கு நன்றி சரவணகுமார்.
தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.....
- சர்வதாரி
வாழ்த்துகள் அனைவருக்கும்.
சர்வதாரி..நீங்களும் நல்லா இருங்க ;)
கருனாநிதி செய்த முட்டாள்த்தனம். இது இந்துக்களின் புதுவருடம்.தமிழ்நாட்டில் உள்ள தமிழ் கிறிஸ்த்தவன் ஜனவரி முதலாம் திகதி கொண்டாடுகின்றான்.
தமிழ் முஸ்லீம் இஸ்லாமிய ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடுகின்றான்
இவர்களை எல்லாம் கருனாநிதியால் தடுக்க முடியுமா?
தைத் திருனாள் ஜனவரி 14ம் திகதி வருகிறது. அது எவ்வாறு யாரல் கணிக்கப்பட்டது?
அந்த விபரம் தெரியுமா?
தமிழன் பல மதங்களில் இருக்கின்றான்.
உலகில் ஒரு இனத்துக்கு புது வருடம் என ஒன்று இல்லை. மத அடிப்படையில் தான் கொண்டாடுகின்றார்கள்.
மத நம்பிக்கையில்லாதவர்கள் மத நம்பிக்கை உள்ளவர்கள் விடயத்தில் ஏன் தலையிட வேண்டும்?
புள்ளிராஜா
//தமிழ்நாட்டில் உள்ள தமிழ் கிறிஸ்த்தவன் ஜனவரி முதலாம் திகதி கொண்டாடுகின்றான்.//
ஜனவரி 1 , ஆங்கில புத்தாண்டு கிறிஸ்தவ புத்தாண்டு அல்ல .. தமிழ்நாட்டில் ஜனவரி 1ஐ கிறிஸ்தவர்கள் மட்டுமா கொண்டாடுகிறார்கள்?
நன்றி பினாத்தல் ஐயா.
நல்லா இருக்கறதாலதான் உங்களையெல்லாம் வாழ்த்த முடியறது.....
-சர்வதாரி
குடுக்குற வரிப்பணம் எல்லாம் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், மக்கள் வாழ்வாதார முன்னேற்துக்கும் உபயோகப்படுத்தப்பட்டு, மக்கள் எல்லாரும் வறுமை என்றால் என்னனு தெரியாம வாழும் நம்ம நாட்டுல நிச்சயமா நல்லாத்தான் இருப்பீங்க சர்வதாரி. நம்ம நாட்டுல இருந்த ஒரே பிரச்சனை புத்தாண்டு எந்த மாசத்துல என்ற குழப்பம்தான், அதையும் முழு மூச்சா ஆராச்சி செய்து முடிச்சு வச்சாச்சு இனிமேல் என்ன தமிழனோட வாழ்கை ஐரோப்பியர்கள் போலவும், அமேரிக்கர்கள் போலவும் சிறப்பா இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!!
NRT-களுக்கு எல்லா பண்டிகைகளும், just an other day தானே...
மனசால தானே கொண்டாடுறோம்...
மகிழ்ச்சியா இருக்குற எல்லா நாளுமே புத்தாண்டு தான்...
புத்தாண்டு வாழ்த்துகள்! :-)
வறுமைக்கும் புத்தாண்டுக்கும் என்னங்க தொடர்பு? இதுவரை சித்திரையில் கொண்டாடியதால் வறுமை போயிருச்சா?
தமிழர்களுக்கான ஒரு புத்தாண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கு என்ன நட்டம்?
-சர்வதாரி
சர்வதாரி அவர்களே,
வறுமைக்கும் புத்தாண்டுக்கும் தொடர்பு இல்லைதான். ஆனால் தமிழ் நாட்டின் வருமைக்கும் தமிழ் புத்தாண்டுக்கும் தொடர்பு இருக்கிறதே...
அட, அதுதாங்க தமிழ்நாடு அரசு!!
தமிழ்நாட்டில் வாழ்வா சாவா பிரச்சனை பல இருக்கும் போது இது ரெம்ப முக்கியமா என்பது தான் கேள்வி?
யாருக்கு என்ன நட்டமா...? தமிழ் நாடு அரசுக்கு பொன்னான நேரம் நட்டம், அரசாணை பிறப்பித்தலுக்கும், செயல்படுத்துவதுக்குமான பணம் நட்டம் இல்லையா?? இந்த பணத்தையும் நேரத்தையும் நாட்காட்டிகூட பார்த்திராத ஏழைகளின் வாழ்கையை உயர்த்துவதற்க்கு செலவிடலாம் அல்லவா??
விபத்தில் அடிபட்டு இரத்தம் சிந்திக்கொண்டிருப்பவனுக்கு, மருத்துவர் வந்து அவனது கிழிந்த சட்டைக்கு தையல் போடும் வேலைதான் இந்த புத்தாண்டு கூத்து. கேட்டால் இது கூட உதவிதான் இதனால் யாருக்கு நட்டம் என்ற கேள்வி வேறு??
சிலருக்கு வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையாயிருக்கிறது.
சிலருக்கோ மானத்தோடுதான் அந்த வயிறு நிரம்பவேண்டும் என்பது வாழ்க்கை.
நீங்கள் முதல்நிலையிலிருந்து பார்க்கிறீர்கள். இன்றைய அரசு இரண்டாம் நிலை. அதன் 'சுயமரியாதை' கொள்கையை தமிழ் மக்கள் அரைநூற்றாண்டாய் அறிவார்கள்.
அவர்கள் தேர்ந்த அரசின் நேரம், பணம் அம்மக்களின் மானம்காக்க சிறிது செலவிடப்பட்டிருப்பது சிறப்பானதே. சட்டசபையில் இவ்வாணை நிறைவேறுவதற்கும் எந்த எதிர்ப்பும் இல்லை.
இது மானம் சம்பத்தப்பட்டது. வெறும் வயிற்றுபாட்டாளர்களுக்கு புரியவாய்ப்பில்லை!
-சர்வதாரி
தமிழக அரசிற்கு புத்தாண்டு என்றால் என்னவென்றே தெரியாது என்று தான் நினைக்க தோன்றுகிறது..... எனக்கு தெரிந்த வரையில் வருடத்தின் முதல் நாள் தான் புத்தாண்டாக கொண்டாடிவருகிறோம். தமிழக அரசு அதை மாற்றி வருடத்தின் மத்தியில் உள்ள தை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக எப்படி அறிவித்தார்கள் என்று தெரியவில்லை....பாவம் வார்த்தைக்கு வார்த்தை தமிழ், தமிழ் என்று சொல்லும் அவர்களுக்கு தமிழ் வருடத்தின் முதல் நாள் எது என்று தெரியவில்லை....ஆனால் நாம் மக்களுக்கு தெரியும் எது தமிழ் வருடத்தின் முதல் நாள் எது என்று........
சர்வதாரி,
தங்களது நகைச்சுவை உணர்வை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்!!! :-)))))
புத்தாண்டுக்கும் மானத்துக்கும் என்ன சம்மந்தம்?? அப்படியே சம்மந்தம் இருந்தாலும் இதற்க்கு முன் பல நூற்றாண்டுகளாக புத்தாண்டை தமிழர்கள் சித்திரையில் தானே கொண்டாடி வந்தனர்?? அப்போ அவர்கள் எல்லாரும் மானம் கெட்டு வாழ்ந்தனரா??
சரி இப்போது மானம் Vs பசி என்பதை எடுத்துக்கொள்வோம்
1. மானம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது, பசியோ இயற்கையின் கைங்கர்யம்!!
2. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது தமிழர் வாக்கு. அந்த பத்து என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?? நிச்சயம் தெரிந்திருக்காது, 4 வேளை மூக்கில் முட்டுமளவு உணவு உண்டு தொப்பை வளர்த்தவராகதான் இருப்பீர்கள்!! ஏசி ரூமில் உக்காந்து ஏழைபற்றி பேசுபவர் தானே நீங்களும் உங்கள் அரசாங்கங்களும். பசி என்பதெல்லாம் உங்களுக்கு வெறும் வார்த்தைகள் தாம், எங்கட்கோ அது ஒரு கடுமையான உணர்வு.
3. உங்கள் வீட்டு சமையலறையில் சாம்பார் வைக்க கூடாது என்று பக்கத்து வீட்டுக்காரன் சண்டை போட்டால் சரி என்று கோழை போல் கேட்டுக்கொண்டு இருந்த போது போகாத மானம், தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதால் போய்விட்டதா.
4. எது மானமுள்ளது எது மானமற்றது என்பதே மனிதனுக்கு மனிதன் இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. ஆனால் பசி என்பது எல்லா உயிர்களுக்கும் ஒன்றுதான்.
5. முதலில் மனிதன் ஒரு உயிரினம், அதன்பிறகுதான் பகுத்தறிவாளன், மானஸ்தன் இத்தியாதிகள் எல்லாம்.
6. வெள்ளைக்காரன் சட்டை அணியாமல் இருப்பதை மானமற்ற செயல் என்றான், அப்போ காந்தி மானம் கெட்டுப்போயா வாழ்ந்தார்??
அரசாங்கம் முதலில் மக்களின் வயிற்றுப்பாட்டை தீர்க்கட்டும் பிறகு மானம் பற்றி யோசிப்போம்!
பி.கு: அனானியாக வந்து பின்னூட்டுவது மானமுள்ள செயலா அல்லது மானமற்ற செயலா?? கொஞ்சம் விளக்குவீர்களா சர்வதாரி??
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ்ச் சித்திரை நன்னாள் புத்தாண்டு வாழ்த்துகள்.
உங்கள் நகைச்சுவையுணர்வும் உலத்தரமுடையதே ;)
/இதற்க்கு முன் பல நூற்றாண்டுகளாக புத்தாண்டை தமிழர்கள் சித்திரையில் தானே கொண்டாடி வந்தனர்?? அப்போ அவர்கள் எல்லாரும் மானம் கெட்டு வாழ்ந்தனரா??/
இவ்விசயத்தில், ஆம். இன்றும் தமிழை கோயில்களில் பாட வரும் எதிர்ப்புகளும் தமிழர்களின் மானத்துக்கு விடப்படும் சவால் தான்.
/1. மானம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது, பசியோ இயற்கையின் கைங்கர்யம்!!/
நாகரிகமடைந்த மனிதசமூகம் மானத்தோடுதான் பசியாறுகிறது. வெறும் பசியாறுவதுதான் வாழ்க்கையென்றால் மனிதன் உடையே உடுத்தியிருக்கமாட்டான். மிருகநிலையிலேயே இருந்திருப்பான்.
/2. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது தமிழர் வாக்கு. அந்த பத்து என்ன வென்று உங்களுக்கு தெரியுமா??/
தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
/பசி என்பதெல்லாம் உங்களுக்கு வெறும் வார்த்தைகள் தாம், எங்கட்கோ அது ஒரு கடுமையான உணர்வு./
அடுத்தவேளை சாப்பாட்டுக்கு பிச்சையெடுப்பவன்கூட நிர்வாணமாய் திரிவதில்லையே ஏன்?
/3. உங்கள் வீட்டு சமையலறையில் சாம்பார் வைக்க கூடாது என்று பக்கத்து வீட்டுக்காரன் சண்டை போட்டால் சரி என்று கோழை போல் கேட்டுக்கொண்டு இருந்த போது போகாத மானம், தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதால் போய்விட்டதா./
இரண்டுமே மானப்பிரச்சனைதான். போக்கப்படவேண்டயது.
/4. எது மானமுள்ளது எது மானமற்றது என்பதே மனிதனுக்கு மனிதன் இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. ஆனால் பசி என்பது எல்லா உயிர்களுக்கும் ஒன்றுதான்./
மாறுபடுகிறதே ஓழிய, மானமே இல்லாத ஓர் இனத்தை சொல்லுங்கள்.
இவ்விடயம் தமிழ் இனத்துக்கு மானப்பிரச்சனை.
/5. முதலில் மனிதன் ஒரு உயிரினம், அதன்பிறகுதான் பகுத்தறிவாளன், மானஸ்தன் இத்தியாதிகள் எல்லாம்./
இன்றைய மனிதன் வெறும் உயிரினமாக மட்டும் இல்லை. மானஸ்தான் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறான்.
/6. வெள்ளைக்காரன் சட்டை அணியாமல் இருப்பதை மானமற்ற செயல் என்றான், அப்போ காந்தி மானம் கெட்டுப்போயா வாழ்ந்தார்??/
வெள்ளை இனத்துக்கு அப்படி இருக்கலாம். தமிழனுக்கு கோவணம் கட்டிக்கொண்டு உழுவதுகூட இன்று மானமுடையதுதான்.
/அரசாங்கம் முதலில் மக்களின் வயிற்றுப்பாட்டை தீர்க்கட்டும் பிறகு மானம் பற்றி யோசிப்போம்!/
முதலில், தினமும் பசியால் பத்து தமிழர்கள் மடிவது போன்ற மனநிலையிலிருந்து வெளியேவாருங்கள். எல்லோரையும் போல தமிழனும் தன் வாழ்க்கைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறான்.
வயிற்றுப்பாட்டுக்கு போராடும் வேளையில் மானத்தோடும் இருக்கவேண்டிய சூழலில் இன்று மனிதசமூகம்.
/பி.கு: அனானியாக வந்து பின்னூட்டுவது மானமுள்ள செயலா அல்லது மானமற்ற செயலா?? கொஞ்சம் விளக்குவீர்களா சர்வதாரி??/
நான் தமிழ்மண வாசகன். வலைஎழுதவில்லை. கருத்து சொல்லக்கூடாதா?
நீங்கள் கருப்பன் என பதிவு எழுதுவதுபோல் நான் சர்வதாரி என பின்னூட்டமிடுகிறேன். இதில் மானம் எங்கிருந்து வந்தது?
-சர்வதாரி
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின்
"தமிழ் வருடம் பற்றிய" பேச்சு:-
இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் அடுத்த நாள், நிச்சயமாக பெற்றே தீருவோம். ஏனென்றால் தமிழுக்கு ஏற்றம் கிடைக்க, தமிழுக்குப் பெருமை கிடைக்க- மன்னிக்கவும்- நாம் தமிழன்தான் என்று சொல்லிக்கொள்ள இன்னும் நாம் உரிமை பெறவில்லை.அந்த அவமானகரமான ஒரு பள்ளத்தாக்கில் இன்றைக்கு நாம் இருக்கிறோம்.
கடந்த கவர்னர் உரையின்போது அறிவிக்கப்பட்டது-பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக அறிவித்து அந்நாள் முதல் நம்முடைய ஆண்டு கணக்கை மேற்கொள்வோம். இது நாம் கணித்தது அல்ல. பெரும்புலவர் மறைமலை அடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர்கள் கூடி அன்றைக்கு பெரியார் போன்றோருடைய ஆலோசனைகளை எல்லாம் பெற்று அவர்கள் யாத்துத்தந்தது, வகுத்துத் தந்தது நம்முடைய தமிழ் வருட கணக்கு.
நமக்கு இருக்கிற வருடங்கள் எல்லாம் வருடப்பிறப்பு என்றாலும் கூட- ஒரு ஆண் வருட, இன்னொரு ஆண் வருடி அதன் மூலமாக பிறந்த வருடப்பிறப்புகள்தான் அந்த வருடப்பிறப்புகள் என்ற காரணத்தால் நம்முடைய வருடப்பிறப்பு, தமிழனுடைய வருடப்பிறப்பு இதுதான்-வள்ளுவருடைய ஆண்டு தான் நாம் வருடப் பிறப்பாக ஆண்டுப் பிறப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறுதியிட்டு முடிவு செய்து அரசின் சார்பாக சட்டப்பேரவையிலே அனைவருடைய ஏகோபித்த கருத்தையும் பெற்று வெளியிடப்பட்ட அந்த செய்தியை இன்றைக்கு பத்திரிகைகளிலே பார்த்தால் கேலிக்குரியதாக, கிண்டலுக்குரியதாக, அவை எல்லாம் விமர்சிக்கப்படுகிற காட்சியை நாம் காண்கிறோம்.
அவற்றை பார்க்கும்போது எனக்கு வருத்தம் இல்லை. எனக்கு ஒருவகையிலே இதில் மகிழ்ச்சிதான். நம்முடைய தமிழனை எப்படியாவது, யாராவது, கேலிசெய்து தூண்டிவிட்டால்தான் அவன் சொரணையோடு எழுந்து நடமாடுவான். அவன் உலகத்திற்காக செய்ய வேண்டிய, தமிழுக்காக ஆற்ற வேண்டிய காரியத்தை செய்வான் என்ற முறையிலே தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியை நீடிக்க வைக்கிற வீரம், இந்த மகிழ்ச்சியை நாமெல்லாம் இன்று பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் எல்லாம் சிந்திக்கும் வகையில் இந்த நாள் பயன்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
நீங்கள் சொல்லும் தமிழ் வருடங்களுக்கு ஒன்று கூட தமிழ் பெயர் இல்லையே !அப்புறம் எப்படி ஐயா தமிழ் புத்தாண்டு என்று சொல்கிறீர்கள்? இடையில் வந்தவர்களுக்கு வடமொழி பெயரில் அறுபது ஆண்டுகளை தமிழகத்தில் திணிக்க உரிமை இருந்திருக்கிறது என்றால் இப்பொழுது மானமுள்ள தமிழனுக்கு அதை மாற்ற உரிமை இல்லையா?
/////இடையில் வந்தவர்களுக்கு வடமொழி பெயரில் அறுபது ஆண்டுகளை தமிழகத்தில் திணிக்க உரிமை இருந்திருக்கிறது என்றால் இப்பொழுது மானமுள்ள தமிழனுக்கு அதை மாற்ற உரிமை இல்லையா?/////
விவாதத்தின் முத்தாய்ப்பு இதுதான். அடடா! இவ்விவாதத்தை தவறவிட்டுவிட்டேனே!
அனைத்து இந்து/பிராமண/வைதீக மத அன்பர்களுக்கும் ஸ்ர்வாதாரி புத்தாண்டு வாழ்த்துகள்.
ஸ்ர்வாதாரி எத்தனையாவது குழந்தை? ஆணா? பெண்ணா?
--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
இந்தி பேசும் OBC 'தமிழர்கள்'!!!!
பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!
தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..
பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!
தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??
உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…
இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…
உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!
Post a Comment