போன வாரம் நானும் என் தம்பியும் அக்கா வீட்டுக்கு போயிருந்தோம். அக்காவுக்கு சொல்லப்போனால் வீடெல்லாம் கிடையாது. தென்னந்தோப்பு, சுற்றி வயல்வெளி தண்ணீருக்கு கிணறு, கிணற்றை ஒட்டிய மோட்டார் ரூம், அதனோடு இணைந்த ஒரு தகர கூறை ரூம். இந்த தகர கூறை ரூம் தான் அக்காவின் வீடு. அக்காவின் வீட்டுக்குள் 24 மணி நேரமும் டீவி ஓடிக்கொண்டிருக்கும் (உபயம் அக்கா மகள்). மாமா, புதிய திரைப்படம் வந்துவிட்டதென்றால் எங்கேயிருந்தாவது டிவிடி வாங்கிவந்துவிடுவார். என் அக்கா மகள் ஒரு தெய்வப்பிறவி, பின்னே "ஒரு வினாடி கூட காணச்சகிக்காத படங்கள்" என்று தமிழ் பட ரசிகர்களே தியேட்டரை விட்டு விரட்டிய படங்களை கூட பத்து பதினைந்து முறை பார்த்துவிடும் சக்தி மனிதப்பிறவிக்கா இருக்கமுடியும்??
அக்காவின் சமயலறை வீட்டுக்கு வெளியே திறந்தவெளி விறகு அடுப்பு தான். நான் பொதுவாக தெய்வப்பிறவியை தொந்தரவு செய்வதில்லை அதனால் அக்கா சமயல் செய்யும்போது "உள்ளூர் பொறனி" பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்துவிடுவேன். அன்றும் அது போல அடுப்படி அருகில் அமர்ந்து அக்காவிடம் ஒரு வாரம் ஊரில் என்ன நடந்தது என்று Frame By Frameஆக விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
டீவி வால்யூம் அதிகமாக இருந்ததால் உள்ளே ஓடும் வசனங்களை தெளிவாக கேட்கமுடிந்தது. ரகுவரன் தனது பாணியில் சிறப்பாக வசனம் பேசிக்கொண்டிருந்தார். சரி ஒரு நிமிடம் என்ன படம் என்பதை கண்டுபிடிக்கும் ஆவலோடு வசனங்களை கேட்க ஆரம்பித்தேன். தனுஷ் தனது வழக்கமான பாணியில் அப்பா மேல் உள்ள அளவுக்கு மிஞ்சிய பாசத்தால் வாடா, போடா, மாமூ, மச்சி, இன்ன பிற கெட்ட வார்த்தைகளை சராமரியாக உபயோகித்துக் கொண்டிருக்க "என்னடா இது?" என்றேன் என் தம்பியிடம். என் மனதைபுறிந்து கொண்டவனாக, "அப்பாவை நண்பன் மாதிரி நடத்துறாராம்" என்றான். எங்கள் அப்பாவை நாங்களும் நண்பன் போலத்தான் நடத்துவோம் அதற்காக எந்த நண்பனையும் இப்படி கேவலமாக நடத்தியதில்லை. எனக்கு தோன்றிய அதே எண்ணம் என் தம்பிக்கும் தோன்றியிருக்க வேண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.
பிறகு நடந்த உரையாடலில் (அட டீவியில் தான்பா) தனுஷ் வேலை தேடி ஒரு ஐடி கம்பனியில் கலந்துறையாடும் காட்சியில் வரும் வசனங்களை கேட்டேன். எல்லாரும் ஏதோ பேச தனுஷ் மட்டும் யா.. யா... என்று சொல்லிக்கொண்டிருப்பார். உடனே யாரோ ஒரு பெண் இவரை தமிழிலேயே பேசச்சொல்ல(கதாநாயகியாகத்தான் இருந்திருக்க வேண்டும், இதை கண்டுபிடிக்க CBIயா வரவேண்டும்?)... தனுஷ் க்கும்.. க்கும்... (தொண்டைய சரிசெய்துகொண்டு), "வாக்காளர் பெருமக்களே... நீங்கள்...." என்று ஆரம்பித்து ஒருவழியாக முடிக்கிறார் (ஏனோ எனக்கு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒட வேண்டும் என்று எழுந்த அனிச்சை உணர்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்)!
அடுத்ததாக தனுஷ் இன்டர்வியூவுக்கு செல்கிறார், செல்வதற்க்கு முன் வழக்கம் போல அப்பாவை "உன்னை யாரு இங்க வரச்சொன்னது, உன் மூஞ்சியில முழிச்சுட்டேன்ல இன்னி உருப்பட்டாப்லதான்" என்று நல்லவிதமாக ஆசீர்வதித்துவிட்டு செல்கிறார் (இது போன்ற பாசத்தை நீங்கள் உங்கள் தந்தையிடம் காட்டியதுண்டா?? உங்கள் மகன்கள் உங்களிடம் காட்டியதுண்டா?? அப்படியென்றால் உங்களுக்குள் நண்பர்கள் போண்ற உறவு இல்லை! அட நான் சொல்லலைபா தனுஷ் சொல்லுறார்). இன்டர்வியூவில் Mutithread, semaphore, என்று ஏதேதோ வார்த்தைகள் ஒலிக்க. எனக்குள் விழிப்பதற்க்கு காத்திருந்த மிருகம் பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது!
சில சமயம், ஒரு சில கொலைவெறி படங்களை நான் சில மணிநேரம் பார்ப்பதற்கு இந்த கொடூர மிருகம்தான் காரணம். ஒரு சமயம் விஜய் நடித்த "புதிய கீதை" எனும் படத்தையே 45 நிமிடம் பார்த்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்!!!! இந்த கொடிய மிருகம் என்னை எழுப்பி வீட்டுக்குள் அழைத்து சென்றது, என் தம்பியும் ஆர்வமாக பின்தொடர்ந்தான். "என்ன படம் டீ...?" என்றேன் தெய்வப்பிறவியிடம். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை தனது கடமையில் கண்ணாக இருந்தாள். "இந்த ரேஞ்சுல டீவி பாத்தா ஏழாவது ஏழு வருசங்கழுச்சு தான் பாஸ் பண்ணப்போற" என்று கூறி என் மீசையில் இருந்த மண்ணை தட்டிவிட்டேன் (அதற்கும் No Reaction).
சரி என்று டீவி பக்கம் கவனத்தை திருப்பினேன். தனுஷ் கணினி முன் அமர்ந்து ஏதோ டைப் செய்ய ஆஃபீஸில் உள்ள அனைத்து கணினியிலும் ஏதேதோ ஓட அனைவரும் மிரள்கின்றனர் (நான் உள்பட). என் தம்பி என்னை திரும்பி பார்த்தான். "இவன் சாஃப்ட்வேர் இன்சினியர், எப்படி வந்த உடனே அதிரவைக்கிறான் பாரு, நீயும்தான் இருக்கியே பூமிக்கு பாரமா, வெளிய சொல்லாத நீ ஒரு சாஃப்ட்வேர் என்சினியர்னு அது தனுசுக்குதான் அசிங்கம்" என்ற எள்ளல் அந்த பார்வையில் இருந்தது. உடனே யாரே ஒரு ஜென்டில்மேன் தனுஷை/நயன்தாராவை செருப்பால் அடிக்காத குறையாக திட்ட. என் தம்பியும் தெய்வப்பிறவியும் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர். இப்படித்தான உன் ஆபீஸ்லயும் செருப்படி வாங்குவ என்று நினைத்திருப்பார்கள்.
இவ்வளவு அவமானங்களுக்கு பிறகும் நான் வெட்கங்கெட்டு போய் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தனுஷ் வெகுன்டெழுந்து ஓவர் நைட்டில் பிராஜக்டை முடித்து ஏதேதோ அச்சடித்து தள்ளுகிறார். அனைவரும் வியக்கின்றனர் (அட நாங்களுந்தாம்பா... அதை வேற உங்களுக்கு அடிக்கடி சொல்லனுமா?). உடனே நயன்தாரா தனுஷ்மீது பாசப்பார்வை வீச காதல் அரும்பி கனடாவில் ஒருகுத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடப்போகிறார்கள் என்ற சூழ்நிலை உருவாவது அறிந்து எழுந்து வெளியே ஓடினேன். என் தம்பியும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தான், உள்ளே தெய்வப்பிறவி அடக்கமுடியாத சிரிப்பால் கட்டிலிலிருந்து கீழே தடால் என விழும் சத்தம் கேட்டது. விழுந்தும் உருண்டு உருண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.
இந்த மேட்டர் மக்களுக்கு எப்படி லீக்கானது என தெரியவில்லை அனைத்து பதிவுகளும், குமுதம், ஆனந்த விகடன் என பல பத்திரிகைகளும் "யாரடி நீ மோகினி" பயங்கர காமடி படம் என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன!!
ஊர் உலகத்துக்கே தெரிந்து இவ்வளவு அவமானம் ஆகிவிட்ட போது, வாழ்ந்து என்ன பயன் என்று வாழ்கை வெறுத்து கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்க தயாரானேன். என் தம்பி என்னை தடுத்து ஏற்கனவே இந்த படத்திலெல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து ரகுவரன் தற்கொலை செய்துகொண்டார், நீ அடுத்த தனுஷ் படத்தை பார்த்துட்டு ட்ரை பண்ணு என்று நிறுத்தினான்.
ரகுவரன் எனும் சிறந்த ஒரு நடிகரின் தற்கொலைக்கு காரணமான இந்த குழு மீது யாராவது நடவடிக்கை எடுப்பார்களா?? நான் தற்கொலை செய்துகொள்ளும் பட்சத்தில் இதை எனது கடைசி கடிதமாக Law Enforcement Units எடுத்துக்கொள்ளட்டும்.
:'-(
Disclaimer:
இது வெறும் கதைதான், படம் பார்த்த அந்த ஐந்து நிமிடங்கள் எனக்கு ஏற்பட்ட இரத்த கொதிபின் எல்லையை காட்டுவதற்கு தான் தவிற அவரின் மரணத்தை விளையாட்டாக எண்ணும் நோக்கம் எமக்கில்லை. ஒரு அனானி அவர்கள் இதை Literalஆக எடுத்துக்கொண்டதால் இந்த டிஸ்கி.
Apr 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
21 மறுமொழிகள்:
****இந்த படத்திலெல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து ரகுவரன் தற்கொலை செய்துகொண்டார்****
ஏங்க அவர் cardiac arrest ல இறந்தார்னு இருக்கு. நீங்க என்னான்னா இப்படி பழியைப் போடுறீங்க. ஒருவருடைய இறப்பிலேக் கூடவா விளையாடுவீங்க?
பெயர் சொல்ல விரும்பாதவர்.
கார்டியாக் அரஸ்ட் அதுவா வராதுங்க. அதிக மனஅழுத்தம் leading to அதிக ரத்தக்கொதிப்பு. இது போன்ற படங்களை பாக்குற நமக்கே இவ்வளவு BP எகுறுதே பாவம் அவரு என்ன பண்னுவாரு.
எதையும் Literalஆகவே எடுத்துக்கொள்ளாதீர்கள், பெயர் சொல்ல விரும்பாதவரே.
கருப்பன் சார்,
பார்த்து பேசுங்க.அடுத்த சூஊஊஊஊஊஊஊஊஊஊஊப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபபபபபபபப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்டார் படத்தை பற்றி இப்படியா எழுதறது.
அகில உலக, தமிழ்மண்ணின் புருஸ்லி, ஒல்லிபாச்சன், நடனப் புயல்,ஸ்டெயில் கிங்,வசூல் சக்கரவர்த்தி,கவர்ச்சிக் கதாநாயகன் அண்ணன் தணுசு ரசிகப் பட்டாளம் உங்களை நோக்கி வருவதாகா தகவல்.
"ஜாக்கிரதை"
எனது ரூம்மேட்டும் ஒரு தெய்வப்பிறவிதான் திரு.கருப்பன். "ஜாவா இஸ் ஏ ஆப்ஜக்ட் ஓரியண்டட் ப்ரோக்ராம்..ஜாவா இஸ் ஏ ஆப்ஜக்ட் ஓரியண்டட் ப்ரோக்ராம்..ஜாவா இஸ் ஏ..." என்று தனுஷ் குத்தி குத்தி மனப்பாடம் செய்து கொண்டிருந்ததை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் படத்தின் பெயரை மட்டும் கேட்டு தெரிந்து கொண்டேன். ஒரு safty -க்கு.
அனானி,
தனுஷே நேரடியாக கிளம்பினால் தான் நான் பயப்படவேண்டும் (வில்லனை அடிக்கும் உரிமை ஒன்லி கதாநாயகனுக்குதானுங்க இருக்கு). கதாநாயகனோட சப்போர்டர்ஸ் எல்லாம் வில்லன்கிட்ட நல்லா ஒதை தான் வாங்குவாங்க!!! இருந்தாலும் தகவலுக்கு நன்றி. ஒரு ஆம்புலன்ஸை வீட்டுக்கு வெளியே நிறுத்த சொல்லியிருக்கிறேன்!!
மோகன்,
நீங்கள் ரெம்ப உஷாரானவர்தான். நான்தான் படத்தை பார்த்துவிட்டு பெயரை கேட்டு தெரிந்து கொண்டேன் :-(
பெயர் சொல்ல விரும்பாதவர், அனானி, மோகன் வருகைக்கு நன்றி!
கருப்பரே,
விமர்சனம் என்ற பெயரில் சும்மா பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் :) இந்த உருப்படாத படத்தை நான் தெரியாத்தனமா தியேட்டர்ல வச்சுப் பார்த்தேன், ஞாயிறு அன்று, பால்கனி டிக்கெட்ல 10% ஆட்கள் கூடத் தேறலை :(
எ.அ.பாலா
//
இந்த உருப்படாத படத்தை நான் தெரியாத்தனமா தியேட்டர்ல வச்சுப் பார்த்தேன்
//
பாலா, நீங்கள் தியேட்டரை விட்டு வரும்போது தியேட்டர் முதலாளி "இவரு என்ன படம் போட்டாலும் பாக்குறாரு, இவரு ரெம்ப நல்லவருனு" ஒரு வர்த்தை சென்னதை கவனிச்சீங்களா??
கருப்பன் ஐயா,
மாறுப்பட்டவிமர்சனம் கூறுபோட்டு இருக்கிறீர்கள் !
:)
படம் நல்லாத்தானே இருந்தது.. படத்தப் பத்தின என்னுடைய பதிவு
யாரடி நீ மோகினி - என் பார்வையில்
அடிக்கடி விமர்சனம் எழுதுங்க!
நல்லவேளை எனக்கு நானே இந்த (மாதிரி படத்தையெல்லாம் பார்த்து...) பனிஸ்மெண்ட் எல்லாம் கொடுத்துக்கிற அளவிற்கு மன வியாதி முத்திப் போகலை :-)).
ஐயா!
இப்படி ஒரு தெய்வீக விமர்சனத்த போட்டு நம்ம படிக்கப் பண்ணி நம்மலையும் தெய்வீகப் பிறவியாக்கிப்புட்டீங்க ஐயா :))
annae andha vetti payala pathi ezhudhureengalae.namakku dhaan time waste...yedhaavadhu nalla topic eh ezhudhunga annae..ellaarkum romba useful eh irukkum
I laughed so hard. Good one.
Ravi
நான் ஒரு பின்னூட்டம் போட்டேனே, வந்துச்சா இல்லையா?
//
நான் ஒரு பின்னூட்டம் போட்டேனே, வந்துச்சா இல்லையா?
//
அண்ணே, அதான்னே இது!!
பி.கு: இது தவிற வேறு எதுவும் வரவில்லை!
கோவியார், ரவி வருகைக்கு நன்றி.
அருண், இது கூட மக்களுக்கு உதவுவதற்காகதான் "யாம் பெற்ற துன்பம் பெறவேண்டாமே இவ்வையகம்!".
ஆங்கிலத்தில் ஒரு டெக்னிகல் பிளாக் ஆரம்பிக்க உள்ளேன்! :-)
மன்னிக்கவும் தெகா, சில பின்னூட்டங்கள் எனது மெயிலுக்கு வரவில்லை :-(
டேஷ்போர்டில் இப்போதான் பார்த்தேன்!
//யாம் பெற்ற துன்பம் பெறவேண்டாமே இவ்வையகம்//
அண்ணா கலக்கீட்டீங்க
நக்கல் நையாண்டியுடன் விமர்சனத்தில் உங்கள் ஆதகங்களை நல்லா ்வெளிப்படுத்தியிருக்கிறீங்க!
[finding hard to comment in tamil font in this pop up comment box....has anyone faced the same difficulty???]
//ஆங்கிலத்தில் ஒரு டெக்னிகல் பிளாக் ஆரம்பிக்க உள்ளேன்! :-)//
ஏன் இந்த விபரீத முடிவு .....??? இதேமாதிரி நையாண்டி பதிவுகளை ஆங்கிலத்தில் போட்டால் இந்த உலகமே சிரித்து பயன்பெருமே ...
unga commentse paathi page iruku
Post a Comment