நேற்று "I am Legend" - இன் DVD வாங்கினேன். வாங்கும்போது சிறிது தயக்கமாகத்தான் இருந்தது, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு பரபரப்பான செய்தியையும் கேட்டிருக்கவில்லையே. ஆனால் படத்தின் பெயர்மட்டுமல்ல படமே ஒரு Legend என்பதை பிறகு புரிந்துகொண்டேன்.


நம்மைத்தவிர, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் திடீரென்று இறந்துவிட்டால் என்னவாகும் என்று நாம் சில சமயம் நினைத்துப்பார்ப்போம். அந்த நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு மிகச்சிறந்த படம்தான் இது. வில்ஸ்மித்தை எனக்கு அவ்வளவாக பிடிக்காது, இந்த படம் பார்த்ததிலிருந்து நான் அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்!!

புற்று நோயை குணப்படுத்த, மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் கிருமி, புற்று நோயை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மிகவேகமாகப் பரவி மனித இனத்தையே அழித்து விடுகிறது. நியூயார்க்கில் கிருமியால் தாக்கப்படாத ஒரே மனிதன் Dr. Robert Neville (வில்ஸ்மித்), நோயால் தாக்கப்படாத மற்றவர்களை தேடுவதோடு, நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலையிலும் இறங்குகிறார். உலகத்தில் உள்ள 90% மக்கள் கிருமியின் தாக்கத்தால் உயிரிழக்கின்றனர். 9% மக்கள் கிருமியால் தாக்கப்பட்டு, வெறிபிடித்த Zombi-களை போல அலைகின்றனர், மீதமுள்ள 1% மக்களும் தனிமை வாட்டத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர், இன்னும் சிலர் கொலைசெய்யப்படுகின்றனர், வில்ஸ்மித் தனி மனிதனாக நியூயார்கில் வலம் வருகிறார். இந்த தனிமனிதன் தனது இனத்தை பல பிரச்சனைகளுக்கு மத்தியில் எவ்வாறு காப்பாறுகிறார் என்பதை அழகாக சொல்லும் படம்தான் "ஐ ஆம் லெஜன்ட்".

படத்தின் சிறப்பம்சங்கள்

* படத்தில் செட்டிங் மிகவும் அற்புதமாகவும் தனிமையின் கொடூரத்தை கண்முன் நிறுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது


* இடையில் காட்டப்படும் ஃப்ளாஷ் பேக்குகள் மக்கள் இருக்கும் போது உள்ள நகரத்திற்கும், மக்கள் இல்லாத நகரத்திற்கும் வேறுபாட்டை அழகாக சொல்கிறது


* தனிமை வாழ்கையில் தனது ஒரே நண்பனான Sam என்ற நாயை இழந்து கதாநாயகன் தவிப்பது, Human Psychology-யை அப்படியே பிரதிபலிக்கின்றது


* வில்ஸ்மித், நாயை இழந்து வீடியோகடைக்கு வந்து பொம்மையிடம் ஹலோ சொல்லச்சொல்லி கெஞ்சுமிடத்தில் சென்டிமென்டாக நெஞ்சை தொட்டுவிடுகிறார்


* கதை சொல்லும் விதமும், character development-ம் மிக மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது


* படத்தில் எல்லாக்காட்சிகளிம் பல நுணுக்கங்கள் உள்ளன, வில்ஸ்மித் Shrek-3 படத்தை பார்த்து அனத்து வசனங்களையும் அச்சு அசலாக கூறும் போது அவர் அதை எத்தனை முறை பார்த்திருப்பார் என்பதும் தனிமை எவ்வளவு கொடுமை என்பதும் தெரியும்


* தனது ஆராய்ச்சியை பதிவுசெய்யும் காட்சிகள் மிக மிக நேர்த்தியானவை!!

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகச்சிறந்த ஒரு படம் பார்த்த திருப்தி மனதில் நிற்கின்றது. ஒருவழியாக பீமா முதல் நாள் காட்சி பார்த்த பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன்.

10 மறுமொழிகள்:

Anonymous said...

This is a great film. Watch Hitch and I, Robot both are great films of Will Smith.

ஸ்ரீ said...

நானும் சமீபத்தில் பார்த்து வியந்த படம் இது. டிவிடியில் பார்ப்பதை விட தியேட்டரில் பார்த்திருந்தால் உங்களுக்கு இந்த படம் இன்னும் அழகாக இருந்திருக்கும். சில இடங்களில் குறிப்பாக நாயை(Sam) கொல்லும் போது அழ வைத்துவிட்டார். அவர் உபயோகித்த முறையிலேயே அவரையே பிடிப்பது அருமையான காட்சி. மொத்ததில் படம் ஒன்னாங்கிளாஸ் ஆனால் பலருக்கு இந்த படம் ஏனோ பிடிக்கவில்லை. நம்ம ஆளுங்களுக்கு பாட்டும், கீரோயினும் இல்லாத குறை போல :(

வால்பையன் said...

//வில்ஸ்மித்தை எனக்கு அவ்வளவாக பிடிக்காது,//

ஆங்கில பட ரசிகர்களுக்கு இவரை பிடிக்காமல் இருக்காது!
இவர் நடிகர் மட்டுமல்ல சிறந்த பாடகரும் கூட!

sherk படத்தில் கழுதைக்கு பிண்ணனி குரல் இவர் தான்

வால்பையன்

பிரேம்ஜி said...

எனக்கு இப்படத்தை imax திரை அரங்கின் மிக பிரம்மாண்டமான திரையில் பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. நல்ல Thriller. வில் ஸ்மித் நன்றாக நடித்திருந்தார்.

கருப்பன் (A) Sundar said...

அனானி, வருகைக்கு நன்றி நிச்சயம் Hitch மற்றும் ஐ-ரோபோட் பார்க்கிறேன்.

ஸ்ரீ, நான் ஹோம் தியேட்டர் வைத்துள்ளேன் அதனால் திரைக்கும் DVD யில் பார்பதற்க்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும் திரையில் கானும் சந்தர்பம் கிடைத்தால் மிஸ் பண்ண மாட்டேன். என் நண்பர்களுக்கு ரெக்கமன்ட் பண்ணியிருக்கிறேன் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம்! வருகைக்கு நன்றி ஸ்ரீ அவர்களே.

வால்பையன், நான் கூட ஆங்கில படங்கள் அதிகம் பார்பவன்தான். நான் முதலில் பார்த்த வில்ஸ்மித் படம் MIB, படம் ரெம்ப இம்ப்ரஸிவ்வாக இல்லாத காரணத்தால் தான் வில்ஸ்மித் மீதும் ஒன்றும் பெரிய ஈடுபாடு இல்லை. I am Legend பார்த்ததில் இருந்து வில்ஸ்மித்தின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்! Shrek கழுதைக்கு குரல் கொடுத்தவர் வில்ஸ்மித்தா??!!! என்னுடைய ஃபேவரைட் கேரக்டர்... தகவலுக்கு மிக்க நன்றி!!!!

கருப்பன் (A) Sundar said...

ப்ரேம்ஜி, நிச்சம் திரையில் காணும் சந்தர்பம் கிடைத்தால் தவரவிடமாட்டேன். வருகைக்கு நன்றி.

Muruganandan M.K. said...

ஆர்வமூட்டும் கட்டுரை. இங்கு டிவிடியில் கிடைக்குமா எனப் பார்க்கிறேன். கட்டாயம் பாரக்க வேவண்டியது போல் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி

Jay said...

என்ன வில்ஸ்மித் பிடிக்காதா!!! என்னா சாரே!!!
எனக்கு விருப்பமான ஆங்கில நடிகர்கள் பட்டியலில் இவருக்கு முதலிடம் பெர்சுயிட் ஒப் ஹப்பினஸ் பார்த்தீங்களா??? அதில நடிப்ப பாருங்க.. நம்ம கமல் தோத்துடுவார்..

அழகான விரிவான விமர்சனத்திற்கு நன்றி!

யாத்ரீகன் said...

>>> Shrek கழுதைக்கு குரல் கொடுத்தவர் வில்ஸ்மித்தா??!!! என்னுடைய ஃபேவரைட் கேரக்டர்... <<<

அது எடி மர்பி - Eddie Murphy

கருப்பன் (A) Sundar said...

//
என்ன வில்ஸ்மித் பிடிக்காதா!!! என்னா சாரே!!!
எனக்கு விருப்பமான ஆங்கில நடிகர்கள் பட்டியலில் இவருக்கு முதலிடம் பெர்சுயிட் ஒப் ஹப்பினஸ் பார்த்தீங்களா??? அதில நடிப்ப பாருங்க.. நம்ம கமல் தோத்துடுவார்..
//
Pursuit of happiness நிச்சயம் பார்க்கிறேன். "எனக்கு அவ்வளவாக பிடிக்காது" என்பது இவருக்காக படத்தை விரும்பிப் பார்க்கும் அளவு அபிப்ராயம் இல்லை என்பதை குறிப்பதற்கு பயன்படுத்தினேன். 'I am Legend'ல் என்ன மிகவும் இம்ப்ரஸ் செய்துவிட்டார் என்று சொல்லவந்தேன்!

//
>>> Shrek கழுதைக்கு குரல் கொடுத்தவர் வில்ஸ்மித்தா??!!! என்னுடைய ஃபேவரைட் கேரக்டர்... <<<

அது எடி மர்பி - Eddie Murphy
//
சரியாக கூறினீர்கள் யாத்ரீகன், நானும் imdbயில் சரிபார்த்துவிட்டேன்.

டாக்டர் எம்.கே.எம், மயூரேசன், யாத்திரீகன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!