கணினி உபயோகிப்போர் அனைவருக்கும் வைரஸ் என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. வைரஸ்ஸை தடுப்பதற்க்கு ஆன்டி-வைரஸ் தான் ஒரே வழி என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் முறையான செட்டிங் செய்வதாலும், இன்டர்நெட், பென்டிரைவ் பயன் படுத்தும் போது கவனமாக இருப்பதாலும் பெரும்பாலான வைரஸ்களை தடுக்க முடியும். Virus/Trojans/Worms தடுப்பதற்க்கு சில வழிமுறைகளை கீழே பார்க்கலாம்

பயனர் அக்கவுன்ட் உபயோகம்
* உங்கள் கணினியில் இரண்டு பயனர் (User) அக்கவுன்ட்கள் உருவாக்குங்கள்.
* ஒரு பயனருக்கு கணினி நிர்வாக உரிமையை வழங்குங்கள் (Administrator Rights)
* இன்னொறு பயனருக்கு உபயோக்கிப்போர் உரிமையை வழங்குங்கள் (User Rights)
* முதல் பயனர் அக்கவுன்டை கணினி நிர்வாகத்திற்கு (புதிய மென்பொருள் நிறுவுதல், காலத்தை மாற்றியமைத்தல்) முதலியவற்றுக்கு பயன்படுத்துங்கள்
* இரண்டாவது பயனரை மற்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துங்கள் (Web Browsing, programming, image viewing, movie watching etc..)

Autorun Disable செய்தல்
* பென்டிரைவ், சி.டி, முதலிய வெளியில் எடுத்துச் செல்லக்கூடிய மீடியங்களின் மூலம் பரவும் வைரஸ், வின்டோஸில் உள்ள ஆட்டோரன் (Autorun) சேவையை பயன்படுத்துத்திக்கொள்கிறது.

* ஆட்டோரன் சேவை பெரும்பாலான நேரங்களில் நமக்கு தேவைப்படுவதில்லை அதனால் அதை Disable செய்வது நல்லது.

* Start Menu->Run க்கு சென்று gpedit.msc என்று டைப் செய்து OK பட்டனை அழுத்துங்கள். கீழ்கானும் வின்டோ திறக்கும்
* படத்தில் உள்ளதைப்போல இடதுபுறம் உள்ள கிளையில் User Configuration --> Administrative Templates --> System என்ற ஃபோல்டரை திறந்து வலது புறம் உள்ள
Turn off Autoplay என்ற ஐட்டத்தை இரண்டு முறை சொடுக்குங்கள் (Double Click).

* புதிதாக தோன்றும் வின்டோவில் Enabled என்பதை தேர்வு செய்து All Drives என்பதை தேர்வு செய்யவும். OKவை சொடுக்கி வின்டோவை மூடுங்கள்

எக்ஸ்டன்ஷனை காட்டச்செய்தல்
* பல வைரஸ்கள் பார்பதற்கு ஃபோல்டர்களை போலவே காட்சியளிக்கும், ஆனால் அவற்றின் எக்ஸ்டன்சன் .exe என்று இருக்கும் (கீழே உள்ள படத்தை பார்க்கவும், பச்சைவட்டம் உன்மையான ஃபோல்டர், சிகப்பு வட்டம் வைரஸ்)
* எக்ஸ்டன்ஷன் காட்டப்படவில்லை என்றால், இதுபோன்ற வைரஸ்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது
* வின்டோஸ் பைல் எக்ஸ்டன்ஷன்களை காட்டுவதற்க்கு Control Panel-->Folder Option திறந்து கீழ் காணும் படத்தில் உள்ளது போல் Hide Extensions for known file types என்ற டிக் பாக்ஸில் உள்ள டிக்கை எடுத்துவிடுங்கள்.
* .exe, .pif, .scr, .com, .bat, .cmd போன்ற எக்ஸ்டன்ஷன்களை கொண்ட பைல்களை (நீங்கள் நிறுவாமல் இருக்கும் பட்சத்தில்) சொடுக்காதீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கண்ட கண்ட IE Toolbar-களை நிறுவாதீர்கள்!!!


பெரும்பாலும் வைரஸ்கள் நமது கவனக்குறைவால்தான் பரவுகின்றன, கவனமாக இருந்தால் வைரஸ்கள் ஒன்றும் பெரிய தொல்லை கொடுக்கமுடியாது.

7 மறுமொழிகள்:

கிஷோர் said...

அட்டகாசம் கலக்கிட்டீங்க போங்க. அருமையான பதிவு

கருப்பன் (A) Sundar said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கிஷோர்.

Muruganandan M.K. said...

மிகவும் பிரயோசனமுள்ள பதிவு. உடனடியாகவே செயற்படுத்தினேன்.

Tech Shankar said...

Ingeyum idhe pola


You can look at here too


Endrum anbudan

TamilNenjam

Divya said...

பயனுள்ள பதிவு, பகிர்விற்கு நன்றி!!

கருப்பன் (A) Sundar said...

நன்றி திவ்யா, என்னிடம் பல நண்பர்கள் உதவி கணினி பிரச்சனைக்கு உதவி கேட்பார்கள். பெரும்பாலானவர்களின் பிரச்சனை கவனக்குறைவால் வருவதுதான். உதாரணத்துக்கு சில...

1. கணினி தானாக ரீ-பூட் ஆகின்றது
2. மை கம்ப்யூட்டரை சொடுக்கினால் கன்ட்ரோல் பேனல் திறக்கிறது
3. கணினி திடீரென மிகவும் மெதுவாக ஓருகிறது
4. CD டிரைவ் தானாக திறந்து மூடுகிறது
5. எந்த டிரைவும் ஓப்பனாக மாட்டேன் என்கிறது
6. regedit, cmd shell, task manager, folder option முதலிய அப்ளிகேஷன்கள் ஓடவில்லை
7. டிரைவில் ஃப்ரீ ஸ்பேஸ் செக் செய்தால் ஃபைல்கள் இருக்கின்றன ஆனால் டிரைவை திறந்து பார்த்தால் ஒன்றும் இல்லை

இவையெல்லாம் இந்த ஆட்டோரன் மூலம் கணினியில் இனையும் வைரசுகள் செய்யும் சேட்டைகளாகும்!!

Unknown said...

பயனுள்ள பதிவு திரு.கருப்பன்..

பகிர்விற்கு நன்றி..