தமிழில் பொதுவாக பெண்களை குறிப்பிடும் போது மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட நேர்மாறாக குறிப்பிடுகின்றனர் ஆண்களை "Cool Guys" என்றும் பெண்களை "Hot Girls" என்றும் கூறுகின்றனர். தமிழில் நெருப்பு என்று ஆண்களையும் பஞ்சு என பெண்களையும் குறிப்பிடுகின்றனர்.
இது மட்டுமல்ல நாமெல்லாம் கங்கா, யமுனா, காவேரி என ஆறுகளுக்கு பெயர் வைக்கிறோம் ஆனால் ஆங்கிலத்திலோ கத்ரீனா, ரீட்டா என புயலுக்கும், சூராவளிக்கும் பெயர் வைக்கின்றனர். இந்த முரண்பாடு ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சற்று விளக்குங்களேன்.
கணினி உபயோகிப்போர் அனைவருக்கும் வைரஸ் என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. வைரஸ்ஸை தடுப்பதற்க்கு ஆன்டி-வைரஸ் தான் ஒரே வழி என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் முறையான செட்டிங் செய்வதாலும், இன்டர்நெட், பென்டிரைவ் பயன் படுத்தும் போது கவனமாக இருப்பதாலும் பெரும்பாலான வைரஸ்களை தடுக்க முடியும். Virus/Trojans/Worms தடுப்பதற்க்கு சில வழிமுறைகளை கீழே பார்க்கலாம்
பயனர் அக்கவுன்ட் உபயோகம்
* உங்கள் கணினியில் இரண்டு பயனர் (User) அக்கவுன்ட்கள் உருவாக்குங்கள்.
* ஒரு பயனருக்கு கணினி நிர்வாக உரிமையை வழங்குங்கள் (Administrator Rights)
* இன்னொறு பயனருக்கு உபயோக்கிப்போர் உரிமையை வழங்குங்கள் (User Rights)
* முதல் பயனர் அக்கவுன்டை கணினி நிர்வாகத்திற்கு (புதிய மென்பொருள் நிறுவுதல், காலத்தை மாற்றியமைத்தல்) முதலியவற்றுக்கு பயன்படுத்துங்கள்
* இரண்டாவது பயனரை மற்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துங்கள் (Web Browsing, programming, image viewing, movie watching etc..)
Autorun Disable செய்தல்
* பென்டிரைவ், சி.டி, முதலிய வெளியில் எடுத்துச் செல்லக்கூடிய மீடியங்களின் மூலம் பரவும் வைரஸ், வின்டோஸில் உள்ள ஆட்டோரன் (Autorun) சேவையை பயன்படுத்துத்திக்கொள்கிறது.
* ஆட்டோரன் சேவை பெரும்பாலான நேரங்களில் நமக்கு தேவைப்படுவதில்லை அதனால் அதை Disable செய்வது நல்லது.
* Start Menu->Run க்கு சென்று gpedit.msc என்று டைப் செய்து OK பட்டனை அழுத்துங்கள். கீழ்கானும் வின்டோ திறக்கும்* படத்தில் உள்ளதைப்போல இடதுபுறம் உள்ள கிளையில் User Configuration --> Administrative Templates --> System என்ற ஃபோல்டரை திறந்து வலது புறம் உள்ள
Turn off Autoplay என்ற ஐட்டத்தை இரண்டு முறை சொடுக்குங்கள் (Double Click).
* புதிதாக தோன்றும் வின்டோவில் Enabled என்பதை தேர்வு செய்து All Drives என்பதை தேர்வு செய்யவும். OKவை சொடுக்கி வின்டோவை மூடுங்கள்
எக்ஸ்டன்ஷனை காட்டச்செய்தல்
* பல வைரஸ்கள் பார்பதற்கு ஃபோல்டர்களை போலவே காட்சியளிக்கும், ஆனால் அவற்றின் எக்ஸ்டன்சன் .exe என்று இருக்கும் (கீழே உள்ள படத்தை பார்க்கவும், பச்சைவட்டம் உன்மையான ஃபோல்டர், சிகப்பு வட்டம் வைரஸ்)* எக்ஸ்டன்ஷன் காட்டப்படவில்லை என்றால், இதுபோன்ற வைரஸ்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது
* வின்டோஸ் பைல் எக்ஸ்டன்ஷன்களை காட்டுவதற்க்கு Control Panel-->Folder Option திறந்து கீழ் காணும் படத்தில் உள்ளது போல் Hide Extensions for known file types என்ற டிக் பாக்ஸில் உள்ள டிக்கை எடுத்துவிடுங்கள்.* .exe, .pif, .scr, .com, .bat, .cmd போன்ற எக்ஸ்டன்ஷன்களை கொண்ட பைல்களை (நீங்கள் நிறுவாமல் இருக்கும் பட்சத்தில்) சொடுக்காதீர்கள்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கண்ட கண்ட IE Toolbar-களை நிறுவாதீர்கள்!!!
பெரும்பாலும் வைரஸ்கள் நமது கவனக்குறைவால்தான் பரவுகின்றன, கவனமாக இருந்தால் வைரஸ்கள் ஒன்றும் பெரிய தொல்லை கொடுக்கமுடியாது.
கொலைக்கான அர்த்தம் நமக்கு மனிதனின் உயிரை எடுத்தல் என்றுதான் சொல்லித்தரப்பட்டுள்ளது. ஆனால் மனிதனின் உயிரை எடுப்பதைவிட கொடூரமான கொலைகள் நமது கண்முன் நடந்தும் நாமெல்லாம் அதை கண்டுகொள்ளாக் குருடர்களாகவே வாழ்கிறோம். எனது இந்தப்பதிவு கொலையாகும் மனிதர்களைப்பற்றியல்ல, மனிதானால் கொலை செய்யப்படும் இயற்கை பற்றியது!
இயற்கை உலகத்திற்கு அளித்துள்ள பல பரிசுகளுள் முக்கியமானது மரங்கள்! ஒரு விதை நல்ல மரமாக வளர்வதற்க்கு குறைந்தது 100 வருடங்கள் பிடிக்கிறது, அதன் ஆயுள் காலம் முடிவதற்கு சில 100 வருடங்கள் ஆகிறது. வெறும் 20 ஆண்டுகளில் இளமையடைந்து, 60 ஆண்டுகளில் மாண்டுபோகும் மனிதன் மரங்களை கொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினமும் தன் வாழும் இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கு ஏற்ப தான் வாழும் இடங்களை மாற்றியமைக்கிறான்! இதை நாமெல்லாம் நாகரீக வளர்ச்சி என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நம் உலகத்தில் உள்ள மற்ற உயிர்களை அழிப்பது மட்டுமல்லாமல் நம்மையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலே உள்ள படங்கள் பெங்களூரில் எடுக்கப்பட்டவை! பெங்களூர் 7 வருடங்களுக்கு முன்னால் நான் வந்த போது "பூங்கா நகரம்" - ஆக இருந்தது, இன்றோ இது "புழுதி நகரம்"-ஆக உள்ளது. நான் பெங்களூர் வந்தபோது ஜூன் மாதம், குற்றாலித்தில் இருப்பது போல் காற்றில் மிதக்கும் சாரல், லேசான வெண்பனி, அடர்ந்த மரங்கள், என சொர்கத்திற்குள் நுழைந்த மாதிரி இருந்தது. சூரிய வெளிச்சத்தை பார்க்க கிட்டத்தட்ட பல மாதங்கள் பிடித்தது. தமிழ் நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் கூட இங்கு மிதமான வெப்பமாக இருக்கும் வெய்யில் தரையில் படாத அளவுக்கு மரங்கள் இருக்கும், ரோட்டோரங்களில் நடப்பதே சுகமாக இருக்கும். இன்றோ நிலமை தலைகீழ் பகலில் சுட்டெரிக்கும் வெய்யில் மற்றும் தூசு, இரவில் கடும் குளிர்! பாலைவனத்தில்தான் இவ்வாறு இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மரங்கள் அனைத்தையும் வெட்டி ஒரு நகரத்தையே பாலைவனம் ஆக்கியாகிற்று, என்ன ஒரு சாதனை!!
இந்த பூமி நமக்களித்த வளங்களை எல்லாம் நன்றாக சுரண்டிவிட்டு, நாம் இருதியாக நமது சந்ததியினருக்கு விட்டுப்போவது வெறும் கான்க்ரீட் காடுகளைத்தான்!
நேற்று "I am Legend" - இன் DVD வாங்கினேன். வாங்கும்போது சிறிது தயக்கமாகத்தான் இருந்தது, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு பரபரப்பான செய்தியையும் கேட்டிருக்கவில்லையே. ஆனால் படத்தின் பெயர்மட்டுமல்ல படமே ஒரு Legend என்பதை பிறகு புரிந்துகொண்டேன்.
நம்மைத்தவிர, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் திடீரென்று இறந்துவிட்டால் என்னவாகும் என்று நாம் சில சமயம் நினைத்துப்பார்ப்போம். அந்த நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு மிகச்சிறந்த படம்தான் இது. வில்ஸ்மித்தை எனக்கு அவ்வளவாக பிடிக்காது, இந்த படம் பார்த்ததிலிருந்து நான் அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்!!
புற்று நோயை குணப்படுத்த, மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் கிருமி, புற்று நோயை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மிகவேகமாகப் பரவி மனித இனத்தையே அழித்து விடுகிறது. நியூயார்க்கில் கிருமியால் தாக்கப்படாத ஒரே மனிதன் Dr. Robert Neville (வில்ஸ்மித்), நோயால் தாக்கப்படாத மற்றவர்களை தேடுவதோடு, நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலையிலும் இறங்குகிறார். உலகத்தில் உள்ள 90% மக்கள் கிருமியின் தாக்கத்தால் உயிரிழக்கின்றனர். 9% மக்கள் கிருமியால் தாக்கப்பட்டு, வெறிபிடித்த Zombi-களை போல அலைகின்றனர், மீதமுள்ள 1% மக்களும் தனிமை வாட்டத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர், இன்னும் சிலர் கொலைசெய்யப்படுகின்றனர், வில்ஸ்மித் தனி மனிதனாக நியூயார்கில் வலம் வருகிறார். இந்த தனிமனிதன் தனது இனத்தை பல பிரச்சனைகளுக்கு மத்தியில் எவ்வாறு காப்பாறுகிறார் என்பதை அழகாக சொல்லும் படம்தான் "ஐ ஆம் லெஜன்ட்".
படத்தின் சிறப்பம்சங்கள்
* படத்தில் செட்டிங் மிகவும் அற்புதமாகவும் தனிமையின் கொடூரத்தை கண்முன் நிறுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது
* இடையில் காட்டப்படும் ஃப்ளாஷ் பேக்குகள் மக்கள் இருக்கும் போது உள்ள நகரத்திற்கும், மக்கள் இல்லாத நகரத்திற்கும் வேறுபாட்டை அழகாக சொல்கிறது
* தனிமை வாழ்கையில் தனது ஒரே நண்பனான Sam என்ற நாயை இழந்து கதாநாயகன் தவிப்பது, Human Psychology-யை அப்படியே பிரதிபலிக்கின்றது
* வில்ஸ்மித், நாயை இழந்து வீடியோகடைக்கு வந்து பொம்மையிடம் ஹலோ சொல்லச்சொல்லி கெஞ்சுமிடத்தில் சென்டிமென்டாக நெஞ்சை தொட்டுவிடுகிறார்
* கதை சொல்லும் விதமும், character development-ம் மிக மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது
* படத்தில் எல்லாக்காட்சிகளிம் பல நுணுக்கங்கள் உள்ளன, வில்ஸ்மித் Shrek-3 படத்தை பார்த்து அனத்து வசனங்களையும் அச்சு அசலாக கூறும் போது அவர் அதை எத்தனை முறை பார்த்திருப்பார் என்பதும் தனிமை எவ்வளவு கொடுமை என்பதும் தெரியும்
* தனது ஆராய்ச்சியை பதிவுசெய்யும் காட்சிகள் மிக மிக நேர்த்தியானவை!!
நீண்ட நாட்களுக்கு பிறகு மிகச்சிறந்த ஒரு படம் பார்த்த திருப்தி மனதில் நிற்கின்றது. ஒருவழியாக பீமா முதல் நாள் காட்சி பார்த்த பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன்.