நான் சில நாட்களுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜெய்பூர் சென்றிருந்தேன். அங்கு நான் சில சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றேன் அங்கு நான் சந்தித்த சில அனுபவங்கள் என்னை இந்தியன் என்று சொல்லவே தயங்க வைக்கின்றது!


படத்திலுள்ள அறிவிப்பு பலகையை பாருங்கள்! இந்திய சுற்றுலா பயணிக்கு வசூலிக்கும் பணத்தைவிட அயல்நாட்டு பயணிகளுக்கு 5 மடங்கு அதிகம்!!! இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டதற்கு அவர்களிடம் அதிகப்பணம் இருக்கின்றது என்று பதில் கூறினார்கள்.

சரி அதுபோகட்டும் எவ்வாறு வெளிநாட்டவர்க்கும் நம்நாட்டவர்க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்படுகின்றது என்று தெரியுமா?

தோலின் நிறத்தால்!

எல்லாக் கருப்பர்களும் (ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்தவராக கருதப்படுகின்றனர்), எல்லா வெள்ளையர்களும் ஐரோப்பா அல்லது அமேரிக்கர்களாக கருதப்படுகின்றனர். மாநிறத்தவர் எல்லாம் இந்தியர்களாம்! என்ன கொடுமையிது?

நான் கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுள்ளேன் எங்கும் இது போன்று ஒரு அவலத்தை நான் கண்டதில்லை. அங்கு அனைவரும் ஒன்றாகவே நடத்தப்படுகின்றனர். சமத்துவத்தைப்பற்றி வாய்கிழிய பேசும் நாம் எவ்வளது சமத்துவத்தை கடைபிடிக்கிறோம் என்று பாருங்கள். இந்த அறிவிப்பு இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல கிட்டத்தட்ட ஜெய்பூரில் மற்றும் ஆக்ராவில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிளும் காணலாம்.

இதில் இன்னொரு கொடுமை என்ன என்றால் அனைத்து நாட்டவரும் பணக்காரர்கள் இல்லை... இந்த பூவுலகில் இந்தியாவைவிட ஏழைநாடுகள் தான் அதிகம் உள்ளன! அதிகப்பணம் கொடுப்பதால் இவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் கிடைப்பதில்லை. At least இவர்களுக்கு ஒரு அந்தந்த சுற்றுலாத்தலத்தை விவரிக்கும் சில கை ஏடுகளை கொடுக்கலாம், சில கைடுகளை நியமிக்கலாம்.

இதைத்தவிற Domestic விமான கட்டணமும் வெளிநாட்டவர்க்கும், இந்தியர்களும் வேறு வேறு :-(

6 மறுமொழிகள்:

A Simple Man said...

ஜெய்ப்பூரில் மட்டுமல்ல இந்தியாவில் பல சுற்றுலாத்தளங்களிலும் வெளிநாட்டினருக்கு அதிகமான கட்டணம்தான்... நீங்கள் கூறியது மட்டும்தானா அல்லது வேறேதும் காரணங்கள் உண்டாவென‌ தெரியவில்லை...

-அபுல்

கருப்பன் (A) Sundar said...

வருகைக்கு நன்றி திரு. அபுல் அவர்களே...

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் நான் இதை கண்டதில்லை இருப்பினும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் "இந்து அல்லாத மதத்தினருக்கு அனுமதி இல்லை" என்ற அறிவிப்பு பலகையை பார்த்திருக்கிறேன். :-(

Anonymous said...

Hai Karuppan,
Good post!!!
I saw your feedback in some other blog, seeing the honesty i camet to know about you. Dont loose your honesty after few days.
Continue writing what you feel
Sorry i dont have tamil font
priya priya.dev99@yahoo.com

கருப்பன் (A) Sundar said...

வருகைக்கு நன்றி ப்ரியா...

Anonymous said...

/தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் நான் இதை கண்டதில்லை/
தமிழகத்தில் மாமல்லபுரத்தில் கண்டிருக்கின்றேன். இந்தியருக்கு/பிறருக்கு என்று வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கும் அறிவிப்புப்பலகைகள் இருந்ததாய்க்கூட நினைவுண்டு. மாநிறக்காரர்களாய் இருந்தும் வெளிநாட்டவரே என்றுதான் கட்டணம் வசூலித்தனர் :-).

Anonymous said...

யார் சொன்னது , எல்லா நாட்டிலும் உள் நாட்டவருக்கு குறைவாகவும் வெளி நாட்டினருக்கு கூடுதலாகவும் வசூலிப்பது நார்மலாக நடக்கிறது. நான் ஐரோப்பா சென்றதில்லை ஆனால் மத்திய கிழ்க்கு , தூரகிழக்கு (தாய்லாந்து , மலேசிய , மற்றும் சிங்கப்பூர்) எகிப்து போன்றவற்றில் இப்படி தான்.