என்னுடய நீண்டநாள் கணவு இந்த அழகான மாலைப் பொழுதில் அரங்கேறுகிறது. சமீப காலமாக சிறியவர் முதல் பெரியவர் வரை "Blogg" என்ற வார்த்தையை தாரகமந்திரம் போல் உபயோகிக்கின்றனர். இதோ குதித்துவிட்டேன் கோதாவில்...

என்றோ ஒரு நாள் நான் ஒரு நாளேட்டில் ஒரு கைதியின் பேட்டியை படிக்க நேர்ந்தது. அந்த கைதி தனது முதல் கொலை முதல் முத்தத்தை போன்று இன்பமாய் இருந்தாய் கூறியுள்ளான். நானும் என் முதல் பதிவு இனிமையாக இருக்குமென நம்புகிறேன் (எனக்கு மட்டுமாவது).

ம்... இப்போது பிரச்சனை என்னவென்றால் எதைப்பற்றி எழுதுவது? அரசியல்? சினிமா? பொது? கதை? ஹா... முதலிலேயே ஒரு கருத்தை பற்றி எழுவதற்க்கு எனக்கு மனமில்லை... வேண்டுமானால் இந்த முதல்பதிவை தமிழ் பதிவியல் வித்துவான்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்க்காக வைத்துக்கொள்ளலாம்!

பெரியோர்களே, சிறியோர்களே இந்த அடியேனுக்கு அனேக ஆசி வழங்கி உங்களுள் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
கருப்பன்.

பி.கு: இந்தப்பதிவை தமிழில் எழுத நான் எந்த ஒரு மொழிமாற்றியையும் பயன்படுத்தவில்லை மாறாக இது நேரடியாக தமிழ் (unicode) தட்டச்சு மூலமாக உள்ளீடு செய்யப்பட்டது. பிழை இருப்பின் மன்னித்தருளவும்.

10 மறுமொழிகள்:

ரசிகன் said...

வலைவுலகத்துக்கு நல்வருகைகள் நண்பரே..
ஆரம்பத்துலயே கலக்கறிங்க..பல நல்ல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள்.

ரசிகன் said...

எழுத்துப்பிழை பத்தி கவலைப்படாதிங்க..
தானா சரியாகிடும்.எனக்கு தெரிஞ்சே வர்ர எழுத்துப்பிழைகளை நான் நேரமின்மையால கண்டுக்கறதில்லை.
நான் கூட தமிழ் தட்டச்சு செய்ய ஆரம்பிச்சு .ரெண்டு மாசம் தான் ஆகுது.

ரசிகன் said...

நம்பிக்கையா ஆரம்பியுங்க.. வளர வாழ்த்துக்கள்..
அன்புடன் நண்பன் ரசிகன்.

கருப்பன் (A) Sundar said...

வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி திரு. ரசிகன் அவர்களே.

பாச மலர் / Paasa Malar said...

வலை உலகிற்கு வரவேற்பு..உங்கள் பதிவுகள் படித்தேன்..மேலும் மேலும் படைக்க வாழ்த்துகள்..மீண்டும் ஒரு மதுரைப் பக்கத்தவரைச் சந்திததில் மகிழ்ச்சி..

வால்பையன் said...

புதுசா! பொய் சொல்லாதிங்க! நாங்கல்லாம் வந்த புதுசுல தமிழ்மணத்துல எப்படி இணையருதுன்னே தெரியாம இருந்தோம், நீங்க வந்த உடனே பட்டய கிளபறிங்க!

வாழ்த்துக்கள்

வால்பையன்

tommoy said...

கொடுத்து வச்சவரு... நான் என் முதல் முத்தத்தை ... அய்யோ, முதல் பதிவை வலையேத்திட்டு, தமிழ்மணத்தின் அப்ரூவலுக்கு காத்துக்கொண்டிருக்கிறேன். எப்போ அனுமதி கிடைக்கும் என்று தெரியல, :(

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

நண்பர் கருப்பரே - வருக வருக - வாழ்த்துகள் - படைப்புகளை அள்ளித் தருக - பிழைகள் பற்ற்றி கவலைப்பட வேண்டாம்

கருப்பன் (A) Sundar said...

@முரளி
நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருந்தேன் :-(

சீனா, சிவா மிக்க நன்றி.