நான் இந்த சுட்டியில் உள்ள கதையை படித்தேன். இதிலிருக்கும் தகவல்கள் புதிதாக கடன் அட்டை உபயோகிக்கும் மக்கள் மனதில் புளியைக்கறைக்கும்... ஆனால் கடனட்டையில் இதுபோன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை... என் கடனட்டை உபயோக அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட சில தகவல்கள் இதோ...

1. கடனட்டை எண்கள், கதையில் குறிப்பிட்டுள்ளது போல, அடுத்தடுத்த எண்களாக இருக்காது. இந்த எண்கள், ஒரு குறிப்பிட்ட (CRC) எண் கூட்டுத்தொகை மூலமாக உருவாக்கப்படுகிறது. ஆகையால், தவறுதலாக எழுதப்படும் எண் இன்னொருவரின் எண்ணாக இருப்பதற்கு மிக மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளது (கிட்டத்தட்ட இவ்வாறு நடக்காது என்றே கூறலாம்).

2. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலைகள் கிராஸ்ட் (Crossed/Account Payee) காசோலைகளாக இருக்க வேண்டும் இல்லையேல் காசோலை நிராகரிக்கப்படும்.

3. கிராஸ்ட் காசோலைகள் மூலம் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கணக்குக்கு மட்டுமே மாற்ற இயலும். அதை காசாளரிடம் (cashier) கொடுத்து பணமாக பெற இயலாது.

4. சேமிப்பு கணக்கிலிருந்து காசோலை மூலமாக வேறு கணக்கிற்கு மாற்றப்படும் பணம் சம்பத்தப்பட்ட விவரம், சேமிப்பு வங்கிக்கணக்கு ரெக்கார்டுகளிள் இருக்கும். இந்த ரெக்கார்டுகளை, சேமிப்பு கணக்கின் உரிமையாளர், எந்த நேரத்திலும் தொலைபேசி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ, வேறுசில வழிகள் மூலமாகவோ வங்கியிலிருந்து பெற இயலும்.

5. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலையின் கணக்கு, அந்த கடனட்டை உரிமையாளரின் பெயரில் இருத்தல் அவசியம். உதாரணமாக KARUPPAN என்ற பெயரில் உள்ள கடன் அட்டைக்கு, UNKNOWN என்ற பெயரில் உள்ள சேமிப்பு கணக்கிலிருந்து செழுத்த இயலாது.

எனவே சுப்பிரமணியம் எண்களை தவறாக எழுதி, அந்த தவறான எண் வேறு ஒருவருடயதாக இருப்பதும், அந்த ஒருவரின் பெயரும் சுப்பிரமணியம் என்று இருப்பதும் இயலாத ஒன்று.


வங்கியில் பணிபுரியும் நன்பர்கள் தயவு செய்து தகவல்கள் சரியானவையா என்று தெரிவிக்கவும்.

8 மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...

கருப்பன்,

முதலில் கதையைப்படித்ததற்கும், இவ்வளவு தூரம் அதைப்பற்றி சிந்தித்து, தனிப்பதிவிட்டமைக்கும் நன்றி.

எனக்கு வசதிப்பட்ட வரிசையில் பதிலளிக்கிறேனே :-)

//2. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலைகள் கிராஸ்ட் (Crossed/Account Payee) காசோலைகளாக இருக்க வேண்டும் இல்லையேல் காசோலை நிராகரிக்கப்படும்.

3. கிராஸ்ட் காசோலைகள் மூலம் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கணக்குக்கு மட்டுமே மாற்ற இயலும். அதை காசாளரிடம் (cashier) கொடுத்து பணமாக பெற இயலாது.//

நீங்கள் சொல்வது உண்மை. ஆனால்,

//5. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலையின் கணக்கு, அந்த கடனட்டை உரிமையாளரின் பெயரில் இருத்தல் அவசியம். உதாரணமாக KARUPPAN என்ற பெயரில் உள்ள கடன் அட்டைக்கு, UNKNOWN என்ற பெயரில் உள்ள சேமிப்பு கணக்கிலிருந்து செழுத்த இயலாது.//

இது தவறு. எனக்கும் உங்களுக்கும் வேறு வகையில் கொடுக்கல் வாங்கல் இருந்தால், அதை உங்கள் க்ரெடிட் கார்டு பில்லுக்கு செக்காகக் கொடுத்து தீர்த்துக்கொள்ளலாம். க்ரெடிட் கார்டு நிறுவனத்துக்கு எந்த கார்டுக்கு வருகிறது என்பதுதான் முக்கியமே ஒழிய, யாரிடமிருந்து வருகிறது என்பது கவலையில்லை. தைரியமாகவே இதைச் சொல்கிறேன், ஏனென்றால், பலநேரங்களில் என் நண்பர்கள் கணக்குக்கு நானும், என் கணக்குக்கு நண்பர்களும் செக் அனுப்பியிருக்கோம். அப்ப்போதும் க்ரோஸ்டு காசோலைதான் அனுப்புவோம்(2), ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மட்டுமே மாற்றுவோம்(3).

4. வங்கிக்கணக்கில் தகவல் இருக்கும், எந்த கார்டு எண்ணுக்கு மாற்றப்பட்டது என. ஆனால், அந்தக் கார்டுக்கு உரியவர் யார் என்பது க்ரெடிட் கார்டு நிறுவனத்துக்கு மட்டுமே தெரியும், அதைத் தர அவர்கள் தார்மீக ரீதியாக மறுப்பார்கள்.

எனவே, என் அறிவின்படி (too little it is:-)) நீங்கள் சொல்லியுள்ள 2, 3,4 &5 ஆம் காரணங்களால் இக்கதையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படாது.

ஆனால், முதல் காரணம், இருக்கிறது :-) சுப்பிரமணியம் தவறாக எழுதினான் என்றுதானே சொன்னேன், அடுத்த எண் என்று சொல்லவில்லையே :-) 16 டிஜிட்களில் வேறேதெனும் ஒரு எண் தவறாக இருந்து, அது இன்னொரு சரியான க்ரெடிட் கார்டு எண்ணாக இருக்க -- எவ்வளவு நிகழ்தகவு குறைவாக இருந்த போதிலும் -- சாத்தியம் இருக்கிறது என்ற கற்பனையில், அந்த சீட்டுக்கோட்டையில் கட்டப்பட்ட மாளிகைதான் இக்கதை. மிகைப்படுத்தல் என்று மன்னித்து விட்டுவிடுங்கள், பாவம் பினாத்தலார்:-))

பிகு: மாடரேஷன் இருக்க வார்ட் வெரிபிகேஷன் வைத்தல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று :-)

கருப்பன் (A) Sundar said...

// இது தவறு. எனக்கும் உங்களுக்கும் வேறு வகையில் கொடுக்கல் வாங்கல் இருந்தால், அதை உங்கள் க்ரெடிட் கார்டு பில்லுக்கு செக்காகக் கொடுத்து தீர்த்துக்கொள்ளலாம். க்ரெடிட் கார்டு நிறுவனத்துக்கு எந்த கார்டுக்கு வருகிறது என்பதுதான் முக்கியமே ஒழிய, யாரிடமிருந்து வருகிறது என்பது கவலையில்லை. தைரியமாகவே இதைச் சொல்கிறேன், ஏனென்றால், பலநேரங்களில் என் நண்பர்கள் கணக்குக்கு நானும், என் கணக்குக்கு நண்பர்களும் செக் அனுப்பியிருக்கோம். அப்ப்போதும் க்ரோஸ்டு காசோலைதான் அனுப்புவோம்(2), ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மட்டுமே மாற்றுவோம்(3). //

நான் ஒரு முறை என் நன்பனின் கடனட்டைக்கு பணம் செழுத்த முயன்று தோற்றிருக்கிறேன்...! காரணம் கேட்ட போது பெயர் பொருந்தவில்லை என்றனர். அதைன் விளைவாக வந்த யூகம் தான் இது. மீண்டும் சோதித்துப் பார்க்கிறேன்.

// ஆனால், முதல் காரணம், இருக்கிறது :-) சுப்பிரமணியம் தவறாக எழுதினான் என்றுதானே சொன்னேன், அடுத்த எண் என்று சொல்லவில்லையே :-) 16 டிஜிட்களில் வேறேதெனும் ஒரு எண் தவறாக இருந்து, அது இன்னொரு சரியான க்ரெடிட் கார்டு எண்ணாக இருக்க -- எவ்வளவு நிகழ்தகவு குறைவாக இருந்த போதிலும் -- சாத்தியம் இருக்கிறது என்ற கற்பனையில், அந்த சீட்டுக்கோட்டையில் கட்டப்பட்ட மாளிகைதான் இக்கதை. மிகைப்படுத்தல் என்று மன்னித்து விட்டுவிடுங்கள், பாவம் பினாத்தலார்:-)) //

பினாத்தலாரே நான் கதையை மிகவும் ரசித்தேன் என்பதுதான் உன்மை ஆனால் நான் முன்னொரு காலத்தில் கடனட்டை என்ற ஒன்றை தீண்டத்தகாத ஒன்றாக நினைத்திருந்தேன். காரணம்? நான் படித்த சில கதைகள். மக்கள் கதையை படிப்பதால் உண்டாகும் பயத்தை போக்குவதுதான் என் எண்ணம்.

// பிகு: மாடரேஷன் இருக்க வார்ட் வெரிபிகேஷன் வைத்தல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று :-) //

மண்ணிக்கவும் நான் இன்னும் இந்த Accountஐ முழுவதுமாக Configure செய்யவில்லை. உடனே சரி செய்கிறேன்.

CVR said...

அப்பாடா!!

இது படிச்ச அப்புறம்தான் கொஞசம் நிம்மதியாச்சு!! :-)

cheena (சீனா) said...

பொதுவாக வங்கி காசோலைகள் எழுதும் போது, வங்கியின் பெயர், கடன் அட்டை எண், படன் அட்டைதாரர் பெயர் ஆக மூன்றையும் எழுத வேண்டும். இம்மூன்றில் ஏதெனும் ஒன்று சரியாக இல்லாத பட்சத்தில், அவ்வங்கியானது நம்மைத் தொடர்பு கொள்ளும். இதற்கு வசதியாக, காசோலைகளின் பின்புறம் நம்முடைய தொலைபேசி எண்ணைக் குறிப்பிடுவது நல்லது.

கருப்பன் (A) Sundar said...

குறிப்புக்கு நன்றி திரு. சீனா.

HK Arun said...

நல்ல தகவல்

நன்றி!

Mani said...

He is correct...

Any one can pay to any credit card, as the credit card bank not bother about sender.

Mani

மதுரைவீரன் said...

5. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலையின் கணக்கு, அந்த கடனட்டை உரிமையாளரின் பெயரில் இருத்தல் அவசியம். உதாரணமாக KARUPPAN என்ற பெயரில் உள்ள கடன் அட்டைக்கு, UNKNOWN என்ற பெயரில் உள்ள சேமிப்பு கணக்கிலிருந்து செழுத்த இயலாது.


இது முற்றில்லும் தவறு. எந்த வங்கி கணக்கிளிருன்ந்து வேண்டுமென்றாலும் கிரெடிட் கார்டு கணக்கிற்கு பணம் செலுத்த முடியும்