சமீபத்தில் இந்தியாவில் BCCI-யால் நடத்தப்படும் IPL கிரிகெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கங்கூலியின் பரம ரசிகனான நான் கங்கூலி விளையாடும் விளையாட்டுகளை மட்டும் பார்ப்பேன். ஆனால் விதிவிலக்காக IPL போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்... காரணம்?

IPL மேட்ச்களில் புகுத்தபட்டிருக்கும் புதுமைகள் (எ.டு: Cheerleaders! :-p~). சில போட்டிகளை Cheerleaders-காக மட்டுமே பார்ப்பதும் உண்டு. இப்போது மத்திய பிரதேச மாநில அரசு அதற்கும் அடித்துவிட்டது ஆப்பு. IPL போட்டிகளில் ம.பி அரசு Cheerleaders-களை தடை செய்துள்ளது (ம.பியில் நடக்கும் போட்டிகளுக்கு மட்டுமே என நினைக்கிறேன்). "பெண்களை தெய்வமாக சித்தரிக்கும் எங்கள் நாட்டில், இது போன்ற அரை நிர்வானமாக பெண்களை விளம்பரங்களுக்கு பயண்படுத்துவதை தடை செய்கிறோம்" என மும்பை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் "கிரிகெட் வீளையாட்டில் Cheerleaders பயண்படுத்துவது கலாச்சாரத்துக்கு எந்த விதத்தில் கேடு விளைவிக்கிறது? இது எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் (அட்ரா சக்கை... அட்ரா சக்கை...)

இந்திய "கிரிகெட் ரசிகர்கள்"(?) பல Cheerleader's இடம் அத்துமீறி நடந்துகொண்டதும், ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசும் செயல்களில் இரங்கியும் உள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த Cheerleader "ரசிகர்கள் மிகக்கடுமையான ஆபாச வார்த்தைகளை வீசுவதோடு, physical harassmentடிலும் ஈடுபடுகின்றனர்" என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

நம்மூர் ரசிகனுக செய்யுற சேட்டையில நானே Cheerleaders வேண்டாம்னு சொன்னாலும் ஆச்சயர்யபடுவதற்கில்லை!!!

மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல மேலும் பல இடங்களில் Cheerleaders சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். எல்லை தாண்டும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என ஒரு குரூப் கொலை வெறியுடன் களமிறங்கியிருப்பதாக கேள்வி!!

இன்னும் Cheerleaders எல்லைக்குள்ளயே வரல அப்புறம் எங்கயா மீறுச்சுனு கேக்குறவங்க, ஒரு மாநாட்டை கூட்டுங்க...(மறக்காம எனக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்புங்கப்பா! :-D)

3 மறுமொழிகள்:

Anonymous said...

படமெல்லாம் பட்டைய கிளப்பதுங்கோ
காணாக் கண் கோடி வேண்டுமுங்கோ

மோகன் கந்தசாமி said...

////"பெண்களை தெய்வமாக சித்தரிக்கும் எங்கள் நாட்டில், //// பெண்களை புனிதப்போருளாய் சித்தரிப்பதை விட போகப்போருளாய் சித்தரிப்பதை சகித்துக்கொள்ளலாம். பொருளாதார சுதந்தரமாவது அவர்களுக்கு கிடைக்கும்.

Anonymous said...

நம்மூர் திரைப்படங்களில் காட்டுவது போல முழுக்க முழுக்க சேலை உடுத்தி, முழங்கால் வரை அதை தூக்கி ங்ங்ங்ங்........கா! என சவுண்டு கொடுப்பது ஆபாசமா அல்லது நீச்சல் உடையில் நீச்சல் வீராங்கனை
பல ரசிகர்கள் முன்னிலையில் நீந்துவது ஆபாசமா. ஆடுகளத்தையும் ஆட்டத்தையுல் உயிரோட்டமாக வைக்க வந்த இவர்களை ஆபாசம் என்பதும், அவர்கள் மீது ஆபாச அர்ச்சனைகளை
வீசுவதும் தான் ஆபாசம்.