கிரிக்கெட் இந்தியாவில் அதிக புகழ் பெற்ற விளையாட்டாக இருந்த போதிலும், உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகள் பிரபலமானதாக இருந்ததில்லை. மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்படும் ரஞ்சி போட்டிகளும் கூட பெயர் மட்டும் பிரபலமே அன்றி போட்டிகளை காணும் ரசிகர்கள் மிகமிக குறைவு.

இந்நிலையில் ICL (Indian Cricket League) எனும் அமைப்பு பிரபல கிரிகெட் வீரர்களை அழைத்து ஒரு கிளப் போல உருவாக்கி 20-20 மேட்ச்களை நடத்த ஆரம்பித்தது. கால்பந்து விளையாட்டில் இது போன்ற கிளப் விளையாட்டுகள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலம். சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு இணையாக இந்த கிளப் போட்டிகளுக்கு கூட்டம் இருக்கும் ஜர்மனியில் பெர்லின்-ஹேம்பர்க் (Inter-City) கால்பந்து போட்டிகளுக்கு கூட எங்களால் டிக்கட் வாங்க முடியவில்லை அவ்வளவு கூட்டம். ICLலும் இது போல கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பிரபலமாக்கும் முயற்ச்சியில் இறங்கியது. இந்த போட்டிகளுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் 20-20 மேட்ச்சை இந்தியாவில் ஓரளவு பிரபலமாக்கியது. ஒரு நல்ல திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது.



ICLஐ தொடர்ந்து IPL போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முகேஷ் அம்பானி, விஜய் மல்லயா, ஷாருக் கான் போன்ற பெரும் புள்ளிகள் களத்தில் குதித்தனர். சில ஆயிரம் கோடிகள் களத்தில் குதிக்க IPL டாக் ஆஃப் தி சேனல்ஸ் ஆனது. அனைத்து ஊடகங்களும் தோனி 9-கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்றும் ஏலத்தின் இன்ன பிற சங்கதிகளும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது!

கோடிக்கணக்கில் புரளும் பணமும் ஊடங்களின் ஓயாத விளம்பரங்களாலும் IPL பயங்கரமான எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியது. "The mighty power of Advertisements" என்ற வாக்கியத்தை ICL, IPL ஒப்பீடு மூலம் நன்கு அறியலாம்.

போட்டியில் உள்ள அணிகளின் பட்டியல்:

அணி

தொகை

(in Million USD)

ஏலம் எடுத்தவர்

மும்பை

119.9

முகேஷ் அம்பானி

பெங்களூர்

111.6

விஜய் மல்லயா

ஐதராபாத்

107

டெக்கான் க்ரானிகிள்

சென்னை

91

இந்தியா சிமின்ட்ஸ்

டில்லி

84

ஜி.எம்.ஆர் குரூப்ஸ்

மொஹாலி

76

ப்ரீத்தி ஜிந்தா

கொல்கத்தா

75.1

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மன்ட்

(ஷாருக்கான், ஜூஹி சாவ்லா)

ஜெய்பூர்

67

எமர்ஜிங் மீடியா


இந்த போட்டிகளில் புரலும் பணம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. போட்டியின் மீது கட்டப்படும் சூதாட்டம்/பந்தய தொகை மட்டும் சுமார் 2,000 கோடியாம்!!! ஒலிபரப்பு உரிமையை 10 ஆண்டுகளுக்கு சோனி நிறுவனம் சுமார் 1.026 பில்லியன் US Dollars கொடுத்து வாங்கியுள்ளது!!



T20 IPL போட்டிகளில் உள்ள சில நன்மைகள்
* இந்த போட்டிகளின் மூலம் கிரிகெட் என்பது வெறும் விளையாட்டு நாட்டுப்பற்றுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மக்கள் உணரும் வாய்ப்புள்ளது
* போட்டிகளின் போது ஒரு நாட்டு வீரர் இன்னொருவரை கேலி செய்வதும் முறைப்பதும் குறையும் (என்று வேண்டுமானாலும் சேர்ந்து விளையாட நேரிடும் என்ற அச்சமும் இருக்கும்)
* உள் நாட்டுக்குள்ளே வாய்புகள் கிடைக்காமல் முடங்கிக்கிடந்த பல திறமையான வீரர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள்
* ரஞ்சி போட்டிகளில் எழும் மாநில பிரிவினை கூட இந்த போட்டிகளில் எழ வாய்பில்லை (போட்டியில் அணிகளின் பெயர் மட்டுமே ஊர்களை குறிக்கின்றது வீரர்கள் வேறு நாட்டவராகவோ மாநிலத்தவராகவோ உள்ளனர்)
* அழகான/கவர்ச்சியான Cheer leadersஇன் குளு குளு Cheering!!!

போட்டியில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்
* எந்த இந்திய வீரரும் Man of the match வாங்கவில்லை
* மிகவும் குறைந்த மதிப்பீட்டை பெற்ற ராஜஸ்தான் அணி, அதிகம் பேசப்பட்ட பஞ்சாப் அணியை வீழ்த்தியது
* மெக்கல்லமின் அதிரடி 158ம் இரண்டாவது அதிகம் விலை கொடுக்கப்பட்ட பெங்களூர் அணியின் படு தோல்வியும்!
* புதிய ஜடேஜாவின் சூப்பர் அவதாரம்!! பழய ஜடேஜாவையும் commentary boxல் காணமுடிகின்றது
* Indo-Pak சர்வதேச போட்டிகளுக்கு இணையான கூட்டம்!!
* போட்டி உள்ளூர் நடப்பதை மறந்து இன்னும் சகவீரர்களை முறைத்துக்கொண்டு திரியும் ஸ்ரீசாந்த்!!

5 மறுமொழிகள்:

Sen22 said...

//போட்டி உள்ளூர் நடப்பதை மறந்து இன்னும் சகவீரர்களை முறைத்துக்கொண்டு திரியும் ஸ்ரீசாந்த்!! //


இவர் ஏங்க இப்படி ஆனாரு?????

வந்தியத்தேவன் said...

ஸ்ரீ சாந்தால் அவரின் அணிக்கு கெட்ட பெயர் வந்துகொண்டே இருக்கின்றது மைதானத்தில் சிறந்த அணி எது என்ற தெரிவில் இவரின் மொகாலி அணி 10க்கு 1 புள்ளிமட்டும் இறுதியாக ந்டந்த மேட்சில் பெற்றது/

Arunan Ram said...

Nice review!!!

Anonymous said...

11 fools are palying
11000 fools are seeing

என்று சொன்னதெல்லாம்
எங்கே போச்சு
தெரியலே

சிறில் அலெக்ஸ் said...

//இந்த போட்டிகளின் மூலம் கிரிகெட் என்பது வெறும் விளையாட்டு நாட்டுப்பற்றுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மக்கள் உணரும் வாய்ப்புள்ளது //

super point.