"அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்", நம்மூர்காரர்களின் தாரக மந்திரம் இது! என் தம்பி ஒருநாள் காகிதக் குப்பையை கழிவுநீர் கால்வாயில் தூக்கி எரிந்தான். "ஏன்டா அது சாக்கடைய அடைச்சுக்காதா? அதை பத்தடி தள்ளியிருக்க குப்பை அள்ளுற இடத்துல போட வேண்டியதுதான" என்றேன். அதற்க்கு அவன் "ஏற்கனவே சாக்கடைக்குள்ள குப்பையை யாரோ போட்டிருக்கான்ல நான் போட்டா என்ன தப்பு?" என்று கேட்டான். அந்த பதில் என்னை ஒன்றும் ஆச்சர்யப்படுத்தவில்லை. ஏற்கனவே பலமுறை இந்த வசனத்தை பலரிடம் கேட்டிருக்கிறேன். ஓட்டு கேட்டு வருபவர்கள்கூட தான் செய்த/செய்யவிரும்பும் முன்னேற்ற பணிகள் பற்றி பிரச்சாரம் செய்வதைவிட அடுத்த கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு வாக்களிக்காமல் செய்வதில்தான் குறியாக இருப்பார்கள்.

அது சரி இப்ப எதுக்கு இந்த கதை என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, இந்தா மேட்டருக்கு வந்துட்டேன்...

சமீபத்தில் இந்த சுட்டியில் உள்ள பதிவை படிக்க நேர்ந்தது. அனைகமாக இது பினாத்தலார் பதிவின் பின்விளைவு என்று நினைக்கிறேன் ;-) அதற்கு பின்னூட்டமிடப்போய் தனிப்பதிவாகவே ஆகிவிட்டது :-(

திருவள்ளுவருக்கு சிலை!
///
இத்தன கோடி செலவு பண்ணி வள்ளுவருக்கு சிலை வைப்பதற்க்கு பதிலா மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டலாமே! என்று கேள்வி கேட்டார்கள். ///

நிச்சயமாக அதை செய்திருக்கலாம், மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டுவது அப்படி ஒன்றும் பெரிய தப்பில்லையே.

///
ஏன்டா வெங்காயங்களா விவேகானந்தருக்கு மண்டபமும், சிலையும் வைத்தப்போது அதைக்கேட்க வேண்டியது தானே! சரி! விட்டு தள்ளு கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி விவேகானந்தர் பாறையை பாராமரித்தலை நிறுத்த சொல்லுவியா!
///

அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன். சிலை வைப்பதும், மண்டபம் கட்டுவதும் கண்டிப்பாக தட்டிக்கேட்டிருக்கபடவேண்டிய விஷயம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அந்தப்பாறை சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது அதனால் அதை பராமரிக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு.

///
ஆண்டு தோறும் கோயில் திருப்பணி என்று செலவிடப்படும் மக்கள் பணத்தில், வேறு ஏதாவது செய்யலாமே! மணியாட்டுற ஐயருக்கு கொடுக்கிற மாத சம்பளத்தை நிறுத்தி விட்டு வேறு உழைப்பாளிகளுக்கு ஊதியம் வழங்கலாமே!
///
மக்கள் பணத்தில் நல்ல விஷயங்கள் செய்வது வரவேற்கபடவேண்டிய விஷயம். திருப்பணியில் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. கோவிலை துடைத்து சுகாதாரமாக வைத்துக்கொண்டால் அதுவும் மக்களுக்கு செய்யும் நல்லது தான். திருப்பணி என்ற பெயரில் குடம் குடமாக பாலைவாங்கி அபிசேகம் செய்தால் கண்டிப்பாக கல் எரியவேண்டியது தான்!

///
இதையெல்லாம் சொல்ல மாட்டீர்கள்! ஏனென்றால் இ(ஐ)ந்து என்கிற அடையாளத்தை கட்டிக்காப்பதனுமே! ஆனால் தமிழன் தன் அடையாளத்தை காப்பாற்ற எதையாவது செய்தால் அதற்க்கு நொட்டை சொல்வீர்கள்!
///

திருவள்ளுவருக்கு சிலை அமைத்துதான் தமிழன் என்ற அடையாளத்த காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பது, இந்த முட்டாளுக்கு இப்போது தான் தெரிகிறது.

தமிழ் செம்மொழி என்கிற அறிவிப்பு!
///
இதை செய்து என்னத்த கிழிக்க போகிறார்கள். இதனால் என்ன பயன் என்று பட்டியல் போட்டார்கள். அட! ஒன்னுமே இல்லையே! அப்புறம் எதுக்கு அவசர, அவசரமா சமஸ்கிருதத்தை செம்மொழி என்று அறிவித்தீர்கள்? ஏன்னா அது உங்க மொழி ஆனா தமிழ் தீண்டதகாதவர்களின் மொழி அப்படிதானே!
///

மறுபடியும் அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன். சமஸ்கிருதத்தை செம்மொழி ஆக்கினா நமக்கென்ன ஆக்காட்டி நமக்கென்ன. நம்ம தமிழ் செம்மொழி ஆனத நம்ம சந்தோஷமா ஏத்துக்க வேண்டியதுதான்!

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அறிவிப்பு!
நான் இந்த விளையாட்டுக்கு வரல சாமி ஏற்கனவே பினாத்தலார் பதிவுல சூடு கிளம்பிக்கிட்டிருக்கு.

3 மறுமொழிகள்:

வாக்காளன் said...

பதில்கள் பளிச்சென இல்லாமல், பொத்தாம் பொதுவாக மழுப்பல் ரகமாக இருக்கிறது..

அது பற்றி பேசாமல் இது பற்றி மட்டுமேன் என கேட்டதற்கு...
அட அவன் நிறுத்தசொல்ல நான் நிறுத்தறேன் என்று சொன்னது ஓகே..

அதுவும் சரி இதுவும் சரி என்று சொல்வது என்ன ரகம்?

// சிலை வைப்பதும், மண்டபம் கட்டுவதும் கண்டிப்பாக தட்டிக்கேட்டிருக்கபடவேண்டிய விஷயம். ஆனால்//

தட்டிக்கேட்டிருக்கலாம் ஆனால் கேட்கவில்லை.. என்ன பன்றது.. என்று சொல்வது சரியான பதில் இல்லைங்க..

கேள்விய நீங்க சரியா எடுத்துக்கலை..

அப்போ தட்டிக்கேட்காதவர்கள் இப்போ மட்டும் ஏன் ? அது தான் கேள்வி..

//திருப்பணி என்ற பெயரில் குடம் குடமாக பாலைவாங்கி அபிசேகம் செய்தால் கண்டிப்பாக கல் எரியவேண்டியது தான்!//

இதுக்கு என்ன சொல்றது தெரியல.. செய்தால் என்ன செய்தால்.. செய்வது நன்றாக தெரியுது அதை தானே சொல்றாங்க??

//திருவள்ளுவருக்கு சிலை அமைத்துதான் தமிழன் என்ற அடையாளத்த காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் //

இது என்ன வகை வாதம்? புரியவில்லைங்க.. சில விஷயங்களை அமைப்பது நம் அடையாளத்தை காண்பிப்பதில் தவறில்லை..
அப்படி எனில் கோவில்கள் அமைத்தது தேவையில்லையே..
வேட்டி என்பது தமிழன் அடையாளம் என்கிறோம்.. உடனே, வேட்டிக்கட்டித்தான் அடையாளமா என கேட்பதா?

//சமஸ்கிருதத்தை செம்மொழி ஆக்கினா நமக்கென்ன ஆக்காட்டி நமக்கென்ன.//

இங்கும் பாருங்க.. சரியான தெளிவு இல்லை.. சமஸ்கிருதம் ஆக வேண்டாம்னு யாரும் சொல்லல.. தமிழ் ஆகும் போது மட்டும் ஏன் குரல் வருது?? அதாங்க கேள்வி.

// நம்ம தமிழ் செம்மொழி ஆனத நம்ம சந்தோஷமா ஏத்துக்க வேண்டியதுதான்!//
ஆரம்பத்துல குழம்பி இருந்தாலும் கடைசியா நீங்களே சரியா சொல்லிட்டீங்க.. மிகச்சரி,

சந்தோசமா போகலாம்னு தான் சொல்றாங்க.. இந்த அறிவிப்புக்கு ஆதரவா போறவங்க எல்லாம் அப்படித்தான் சொல்றாங்க.. உங்கள மாதிரியே..

சந்தோஷமா போகாம, எப்படி எப்படி தண்டம் , முன்டம் , திம்மி நு பதிவு போட்டு கேள்வி கேட்டவங்கள தான் அவர் சொல்லியிருக்காருங்க.. இப்போ புரியுதா? யார் சந்தோசமா போறாங்க.. யார் போகலனு..??

அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்!" - இது இங்கே உதாரணமா பொருந்தல...

சுரேகா.. said...

அடிப்படையில் ஒரு நல்ல கேள்வி..

அதைச்சுற்றி பின்னப்பட்ட ஒரு பின்னல்!

கலக்குங்க!

கருப்பன் (A) Sundar said...

//
அதுவும் சரி இதுவும் சரி என்று சொல்வது என்ன ரகம்?
//
வாக்காளன் அவர்களே நான் அதுவும் சரி இதுவும் சரி என்று சொல்லவில்லை. அதுவும் தவறு இதுவும் தவறு என்றுதான் சொல்கிறேன். ஒரு தவருக்கு இன்னொரு தவறை காரணம் காட்டுவது சரியல்ல என்றுதான் சொல்கிறேன்.

//
தட்டிக்கேட்டிருக்கலாம் ஆனால் கேட்கவில்லை.. என்ன பன்றது.. என்று சொல்வது சரியான பதில் இல்லைங்க..

கேள்விய நீங்க சரியா எடுத்துக்கலை..

அப்போ தட்டிக்கேட்காதவர்கள் இப்போ மட்டும் ஏன் ? அது தான் கேள்வி..
//
அப்போ தட்டிக்கேட்கவில்லை என்பதில் அவர்களது சுயநலம் உள்ளது. இப்போது தட்டிக்கேட்கக் கூடாது என்பதில் உங்கள் சுயநலம் உள்ளது. இப்படிப்பட்ட வாதங்களால் நல்லகருத்துகளும் நியாயமான செயல்களும் முக்கியத்துவமற்றுப்போகின்றன.

//
இது என்ன வகை வாதம்? புரியவில்லைங்க.. சில விஷயங்களை அமைப்பது நம் அடையாளத்தை காண்பிப்பதில் தவறில்லை..
அப்படி எனில் கோவில்கள் அமைத்தது தேவையில்லையே..
வேட்டி என்பது தமிழன் அடையாளம் என்கிறோம்.. உடனே, வேட்டிக்கட்டித்தான் அடையாளமா என கேட்பதா?
//
அடையாளத்தை காண்பிப்பதில் நிச்சயம் தவறு இருக்க முடியாது அதை எப்படி காண்பிக்கின்றோம் என்பதில்தான் தவறு இருக்கிறது. திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டின் தென்கோடியில், கோடியில் செலவழித்து ஒரு சிலை நிறுவி நாம் நமது அடையாளத்தை நிலைநிறுத்தவேண்டிய அவசியமில்லை.

வேட்டி என்பது தமிழனின் அடையாளமில்லை மளையாளி என்ன ஆடை உடுத்துகிறான்??

//
இங்கும் பாருங்க.. சரியான தெளிவு இல்லை.. சமஸ்கிருதம் ஆக வேண்டாம்னு யாரும் சொல்லல.. தமிழ் ஆகும் போது மட்டும் ஏன் குரல் வருது?? அதாங்க கேள்வி.
//
தங்கள் பதிவில் தமிழ் செம்மொழியானதை எதிர்த்து யாரும் குரல் கொடுத்தாக குறிப்பிட்டிருந்ததாக நினைவில்லை. தங்கள் கேள்வி "தமிழ் செம்மொழியானதால் மொழிக்கு எந்த உபயோகமும் இல்லை என்று கூறியவர்கள் ஏன் சமஸ்கிருதத்தை செம்மொழி ஆக்கினர்?" என்று படித்ததாக நினைவு.

எனது கருத்தெல்லாம், தமிழ் செம்மொழியானதால் நமக்கு என்ன பயன் என்பது தெரியும் எனவே அவர்களோடு சண்டைபோடுவதால் நாமும் அவர்களுக்கு சமமாக சாக்கடையில் உழன்றவர்களாக ஆகிவிடுவோம். இவர்களை மதிக்கவோ கண்டுகொள்ளவோ கூடாது.

//
சந்தோசமா போகலாம்னு தான் சொல்றாங்க.. இந்த அறிவிப்புக்கு ஆதரவா போறவங்க எல்லாம் அப்படித்தான் சொல்றாங்க.. உங்கள மாதிரியே..

சந்தோஷமா போகாம, எப்படி எப்படி தண்டம் , முன்டம் , திம்மி நு பதிவு போட்டு கேள்வி கேட்டவங்கள தான் அவர் சொல்லியிருக்காருங்க.. இப்போ புரியுதா? யார் சந்தோசமா போறாங்க.. யார் போகலனு..??
//
என்னோட கருத்து என்னவென்றால் தமிழை பழித்து ஒருவன் பதிவெழுதினால், நாம் தமிழை வாழ்த்தி பதிவெழுதவேண்டுமே தவிற, அவனை பழித்து பதிவெழுத தேவையில்லை.