தமிழர் என்ற வலைப்பதிவில் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. பதிவரின் தினமலர் மீதான ஆதங்கம் நல்லவிஷயம்தான் என்றாலும் அவர் ஒப்பீடு செய்துள்ள விஷயத்தை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பதிவில் சொல்லியிருப்பதன் கரு... "உலகத்தின் மிகப்பெரிய திருவிழாவான ரஜினியின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார், இப்பேர்பட்ட அளப்பரிய தியாகத்தை கண்டு தினமலர் போன்ற பத்திரிக்கைகள் திருந்துங்கள்!"

தினமலர் திருந்த வேண்டும் என்ற சீரியஸான விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை ரஜினியின் வேண்டுகோள் என்ற காமடியோடு ஒப்பிட்டு, சொல்லவந்த மேட்டரையும் மிகப்பெரிய காமடி ஆக்கிவிட்டார் பதிவர்.

தினமலர், ரஜினி இருவரையும் பற்றி சிறிது அலசுவோம். First and foremost இருவரது பிழைப்பும் விளம்பரத்தை நம்பித்தான். இருவருக்கும் வருமானம் விளம்பரங்களால்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தினமலரின் விளம்பரம் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள், ரஜியின் விளம்பரம் அந்தந்த சீசனுக்கு ஏற்றது...

1. காவேரி பிரச்சனை சீசன் - உண்ணாவிரதம்
2. ஒகேனேகல் பிரச்சனை சீசன் - கன்னடர்களை எதிர்த்து கொலைவெறி பஞ்ச் டயலாக்குகள்
3. குசேலன் படம் ரிலீஸ் சீசன் - மண்ணிப்பு கடிதம், விளக்கம் etc.. (போட்ட வேஷம் கலைஞ்சிடுச்சு டும்... டும்... டும்... டும்...)
4. ஈழத்தமிழர் பிரச்சனை வலுத்திருக்கும் சீசன் - உண்ணாவிரதம், பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து இன்னபிற இத்தியாதிகள்...

* விஜய்க்கு, டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட போது விஜய் சொன்னாராம் "இனி மேல் ரசிகர்கள் என்னை டாக்டர் விஜய் என்று கண்டிப்பாக அழைக்க கூடாது..." என்று!!!!
* சங்ககால காதல் தலைவி, காதல் தலைவனிடம் சொன்னாளாம் "நான் குளத்துக்கு தண்ணீர் எடுத்து வர போகிறேன் நீங்கள் கண்டிப்பாக அங்கே வரக்கூடாது..." என்று!!!
* ஈழத்தமிழரின் பிரச்சனையை பார்த்து ரஜினி சொன்னாராம் "என்பிறந்தநாளை மக்கள் கண்டிப்பாக கொண்டாட கூடாது" என்று!!!
இந்த மூன்று விஷயங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .

உண்மையில் தமிழீத்தின் மீது அக்கரை உள்ளவர், தனது பிறந்தநாளின் போது ரசிகர்கள் ஈழத்தமிழருக்கு பணமாகவோ, பொருளாகவோ, உணவாகவோ உதவி செய்யுங்கள் என்று தனது ரசிகளுக்கு உத்தரவிடட்டும். அல்லது இவரே இவரது பிறந்தநாளை தமிழ்நாட்டில் அதிகளாக இருக்கும் மக்களோடு கொண்டாடட்டும்.

நம்ம ஊர் விசிலடிச்சான் குஞ்சுகள் கண்களில் ரசிகன் எனும் மஞ்சள் கண்ணாடி மாட்டிக்கொண்டு திரிவதால் ரஜினி போடும் படங்கள் அனைத்தும் மஞ்சளாகவே தெரிகிறது (அந்த கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பாருங்கள் உண்மை நிறம் தெரியும்!). ரஜினியை பார்த்து தினமலர் திருந்தமுடியாது மேலும் விளம்பர பைத்தியம் பிடித்து கெட்டுத்தான் போகும்!!!

பி.கு1: காந்தி "என் மக்களில் பலர் மேல் சட்டை அணியாமல் வருமையில் உள்ளனர், அதனால் நானும் மேல்சட்டை அணியமாட்டேன்" என்று கூறியதையும்... "ஈழத்தமிழர்கள் கஷ்டபடும் போது என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்" என்று ரஜினி கூறியதையும் ஒப்பிட்டு வரும் கொலைவெறி பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது .

பி.கு2: சிறு வயதில் இதே ரஜினிக்காக கட்டிப்புரண்டு நான் சண்டை போட்ட என் கமல் ரசிக நண்பர்களுக்கு, நான் அவனில்லை என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

4 மறுமொழிகள்:

Anonymous said...

இந்தச் சாக்கில் நீங்களும் உங்களை விளம்பரப்டுத்துகிறீர்கள் போல் உள்ளது.
தங்கள் கவனத்துக்கு; நான் இந்தக் கோமாளிகள் எவருக்குமே ரசிகனில்லை.
தங்கள் முகப்பு ,தங்கள் தளப் பெயருக்குப் பொருத்தமில்லை.
மாலைப் பொழுது; இவ்வளவு துக்கமானதும்;பயங்கரமானதுமல்ல....கவித்துவமானது...
இது என் எண்ணம்...

கருப்பன் (A) Sundar said...

அனானி,

//
தங்கள் முகப்பு ,தங்கள் தளப் பெயருக்குப் பொருத்தமில்லை.
மாலைப் பொழுது; இவ்வளவு துக்கமானதும்;பயங்கரமானதுமல்ல....கவித்துவமானது...
இது என் எண்ணம்...
//
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க... ஆனால் எல்லாருக்கும் எல்லா மாலைப்பொழுதும் இனிமையா அமைந்துவிடுவதில்லையே... எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இதே தளத்தில்தான் என் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டியுள்ளது!

//
இந்தச் சாக்கில் நீங்களும் உங்களை விளம்பரப்டுத்துகிறீர்கள் போல் உள்ளது.
//
என் பதிவில் எனது விளம்பரம் எங்கே உள்ளது என இன்னும் தெரியவில்லை. அப்படி அது இருந்தாலும் அது வெறும் சைடு எஃபக்ட் தான், அதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை!

//
தங்கள் கவனத்துக்கு; நான் இந்தக் கோமாளிகள் எவருக்குமே ரசிகனில்லை.
//
கடவுளை எதிர்காதவனெல்லாம் நாத்திகன், விஜய்யை பிடிக்காதவனெல்லாம் அஜித் ரசிகன் என்று சொல்பவன் நானில்லை. இந்த விளக்கம் உங்களுக்கு அடுத்தமுறை தேவையில்லை.

வருகைக்கு நன்றி!

Anonymous said...

Dear Friend

Rajini is given his own statement,Why you are worrying...what is the need of comparing his statements with dinamalam


don't write for cheaper advertisment and don't change the direction of srilankan issue

neengalum jayalaithavu and congressum ondru than


ilatamilanai alithu vitu than maru velai parpirgal....




pls put tamil people supported posts

கருப்பன் (A) Sundar said...

Dear Mr. Anony,
I think there exist a severe problem with either your reading skills, or with my writing skills. One of us has missed the whole point of my blog...

My point is that "Don't get deceived by Rajini", like Mr. Mike (check out http://thamilar.blogspot.com/2008/11/blog-post_605.html)

The title says ரஜினியின் குணம் போற்றத்தக்கது... read that one first and then read mine you might get what I was about to say.

Thanks for the visit and suggestion.