எனது நண்பர்கள் சென்னையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எனக்கும் அந்த சமயத்தில் ஏகப்பட்ட விடுமுறைகள் பாக்கியிருந்ததால் இரண்டுநாள் லீவைப்போட்டுவிட்டு சென்னை சென்றேன். சென்னையில் எனக்கு பிடித்த இடம் பீச் (மெரினா என்றில்லை, சாந்தேம், பாலவாக்கம் கொட்டிவாக்கம் என எந்த பீச் போனாலும் குழந்தை பையனாக மாறிவிடுவேன்).

நன்பர்களுடன் அன்று சாந்தோம் பீச் செல்வது என முடிவெடுத்தோம், பீச்சில் மாங்காய் துண்டு அழகாக வெட்டிவைத்திருப்பார்கள் அதை 10, 15 என வாங்கி வெட்டு வெட்டு என வெட்டுவது எனது பழக்கம். அன்றும் எப்போதும் போல 5 மாங்காய் துண்டுகளை (முதல் ரவுண்டுக்கு தான்) வாங்கி சாப்பிடப்போகும்போது. என் நண்பன் பதறிப்போய் "டேய்...!" என்று கத்தினான். அதிர்ச்சியில் வாயில் கவ்வியிருந்த மாங்காய் துண்டு கீழே விழுந்து விட்டது. "என்னடா?" என்றேன் கண்களில் கொலை வெறியுடன்.

உடனே "அவன் மாங்கா திதேடா அதுல எய்ட்ஸ் வருதாம்" என்றான். எனக்கு பயங்கர ஆச்சர்யம், "மாங்காய்க்கும் எய்ட்ஸுக்கும் என்னடா சம்மந்தம்?" என்றேன். உடனே தனக்கு வந்திருந்த ஃபார்வேர்ட் செயின் மெயில் பற்றி கூறினான். அவன் கூறிய கதை இது தான்

சிறுவன் ஒருவன், தனது பெற்றோருடன் பீச்சுக்கு சென்றிருந்த போது அவன் மாங்காய் வாங்கி தின்றானாம். அவன் தின்ற அந்த நாளில் இருந்து 15 நாட்களுக்கு நோய்வாய்ப்பட்டானாம். அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று கூறிவிட்டார்களாம். அவனது பெற்றோருக்கு இல்லாமல் இவனுக்கு மட்டும் இருப்பதை கண்டு ஆச்சர்யமான மருத்துவர்கள். அவன் ஏதாவது சாப்பிட்டானா என்று கேட்டார்களாம், சிறுவனும் பீச் மாங்காய் பற்றி கூறினானாம். உடனே மாங்காய் விற்பவரை பிடித்து பரிசோதித்ததில் அவருக்கும் எய்ட்ஸ் இருப்பது தெரியவந்ததாம். அவர் மாங்காய் வெட்டும் போது கத்தி கையில் பட்டு ரத்தம் சிறிது அந்த மாங்காயில் தங்கிவிட்டதாம் அதை சாப்பிட்டதால் தான் அந்த பையனுக்கு எய்ட்ஸ் வந்துவிட்டதாம்!!!

கேட்டுவிட்டு எனக்கு தலை சுற்றியது. முட்டாளாக இருப்பதில் தப்பில்லை இப்படி அடிமுட்டாளாக இருக்காதே என்று அறிவுறைகளை அள்ளிவிட்டேன். இவ்வாறெல்லாம் எய்ட்ஸ் பரவ வாய்பில்லை என்று இந்த காரணங்களை சொன்னேன்.

1. HIV கிருமி உள்ள ரத்தம் காற்றோட்டத்தில் காயும் போது அழிந்துவிடும்.
2. மாங்காயில் தூவும் உப்பு பல கிருமிகளை கொல்லும் திறன் வாய்ந்தது.
3. HIV கிருமி ரத்த மண்டலித்தில் கலந்தால் தான் நோய் தாக்கும், உணவு மண்டலத்துக்கு போகும்போது வயிற்றில் இருக்கும் அமிலங்கள் அவற்றை கொன்றுவிடும்
4. HIV ரத்தத்தில் இருப்பது தெரிய குறைந்த பட்சம் 40 நாட்கள் ஆகும்
5. எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் நோய் தொற்றி குறைந்தது 1 வருடம் கழித்துதான் தெரியும்!
6. இது போன்ற முக்கிய செய்திகள் முதலில் Mass Mediaக்களுக்குதான் தெரிந்திருக்கும் யாரோ ஒரு அனானிக்கு அல்ல.

அதன் பிறகு எனக்கே இந்த மெயிலின் Pineapple, மிளகாய் பஜ்ஜி, வெண்டைக்காய் பொறியல் என பல வெர்ஷன்கள் வந்துவிட்டன. நேற்று வந்த அன்னாச்சி பழ வெர்ஷன் கீழே உள்ள படத்தில் இருக்கிறது


இது மட்டுமல்ல பில் கேட்ஸ் நீங்கள் ஒவ்வொறு முறையும் ஒரு குறிப்பிட்ட மெயிலை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு அவரது சொத்திலிருந்த பங்கு கொடுப்பார்.

ஒரு ஏழை குழந்தையின் Brain Tumor குணமாக்க உதவுங்கள் என ஒரு அழகான பாப்பாவின் போட்டோ போட்ட மெயில் நான் முதன் முதலில் 1995ல் மெயில் ஐடி உருவாக்கிய நாளில் இருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கிறது!

இன்னும் எத்தனையோ சங்கிலித்தொடர் மின்-அஞ்சல்கள் நமக்கு வந்துகொண்டுதான் இருக்கிறது அதையும் நம்பி பயந்து பயந்து வாழும் நண்பர்கள் பலர் இருக்கின்றனர்!

6 மறுமொழிகள்:

கிரி said...

//அதிர்ச்சியில் வாயில் கவ்வியிருந்த மாங்காய் துண்டு கீழே விழுந்து விட்டது//

நல்ல காமெடி

//ஒரு ஏழை குழந்தையின் Brain Tumor குணமாக்க உதவுங்கள் என ஒரு அழகான பாப்பாவின் போட்டோ போட்ட மெயில் நான் முதன் முதலில் 1995ல் மெயில் ஐடி உருவாக்கிய நாளில் இருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கிறது//

எனக்கும் கூட :))))

இன்னொரு விஷயம் மறந்துட்டீங்களே!! நீங்க இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு அனுப்பினால் நீங்க நினைத்தது நடக்கும் ஹீ ஹி ஹீ

களப்பிரர் - jp said...

ஏம்ப்பா, உன் மேல இருக்க ஒரு அன்பால - உனக்கு எந்த நோயும் வரக்கூடதுனு உன் நண்பன் அன்பா சொன்னா புடிக்காதோ? ரோட்டுல (எல்லா ஹோட்டல் ளையும் தானப்பா) சுகாதாரம் இல்லாத முறையில் விற்கப்படும் பண்டங்கள் சாப்ட்டா 'கலரா வரும், வயிற்று போக்கு வரும் இன்னும் என்ன என்னமோ வரும் னு' சொல்லி பர்த்தனுங்க - நீங்க கேக்கல. அதனால நம்ம மேல அக்கறை உள்ள யாரோ இந்த மாதிரி புரளிய கெளப்பிஇருப்பாங்க .... ஹி ஹி ஹி.....

பரிசல்காரன் said...

நான் சின்னப் பையனாய் (ஹீ.ஹீ இப்பவும் சின்னவந்தான்!) இருக்கும் போதிலிருந்து இப்படிப்பட்ட நிறைய பார்த்து வெறுத்திருக்கிறேன்.. அப்போது நோட்டீஸ் வடிவில் ஆஞ்சநேயர், பெருமாள் என்று ஏமாற்றி கொண்டிருந்தார்கள்.. இப்போது "TECHNOLOGY HAS IMPROVED VERY MUCH" அல்லவா. அதனால் இப்படி எல்லாம் ஆரம்பித்து எங்கெங்கோ போய் கொண்டிருக்கிறது.. நான் உங்கள் இந்த பதிவை குறைந்தது பத்து பேருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்.. எனக்கு வேண்டாம், யாருக்காவது நல்லது நடக்கும் இல்லையா?

Divya said...

Good one:))

HIV 'points to ponder' are really informative, appreciate ur effort!!

[it has been really a very long time since I visited ur blog,so sorry]

துளசி கோபால் said...

//"TECHNOLOGY HAS IMPROVED VERY MUCH" ...//

அதே அதே.

நம்ம பதிவர்களும் இதைப் பத்துப்பேருக்கு அனுப்பிக்கிட்டுதான் இருக்காங்க.

Please read this அப்படின்னு:-))))

நல்ல பதிவுங்க.

ஆமாம். ரெண்டே நாள் லீவு போட்டுட்டு 'அங்கிட்டு'ப் போனீங்களா?
:-)))))


உங்க பேர் பார்த்துட்டு உள்ளே வந்தேன். ( காரணம் இருக்கு)

shahul2010 said...

super comedy